EPFO: ஓய்வூதியம் பெறும் நபர்கள் கவனத்திற்கு…! இன்று 9 மணி முதல் 6 மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்…!

EPFO money 2025

வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது.


மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து இன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள். சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கும், இ.எஸ்.ஐ.சி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்கேற்போர் தங்கள் குறைகளுக்கு தீர்வு காண t.ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்தவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் முகாம் நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

50 கி.மீ வேகத்தில் காற்று.. 2 மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை...! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்...!

Thu Aug 28 , 2025
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும். இதன் […]
cyclone rain 2025

You May Like