மக்களே கவனம்: செங்கல்பட்டில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!…

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில், 8, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா் உள்ளிட்டோர் பல்வேறு நிறுவனங்களின் தேவைக்கேற்ப தோ்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

KOKILA

Next Post

மின்- ஆதார் இணைப்பு...! இதை கட்டாயம் செய்ய வேண்டும்...! தமிழக அரசு முக்கிய தகவல்...!

Sat Dec 31 , 2022
தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் TNEB கணக்கை இணைப்பதில் உதவுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை இணைப்பதற்கான […]
’மறுபடியும் முதல்ல இருந்தா’..!! ஆன்லைன் மூலம் மின் இணைப்பு இணைத்தவர்களுக்கு சிக்கல்..!!

You May Like