ஜூலையில் மிகப்பெரிய பேரழிவு!. ஆயிரக்கணக்கானோர் இறக்க நேரிடும்!. ஜப்பான் பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு!.

tsunami japan baba vanga

ஜூலையில் மெகா சுனாமி பேரழிவு நிகழக்கூடும் என்றும் இதனால் ஆயிரக்கணக்கானோர் இறக்க நேரிடும் என்றும் ஜப்பான் பாபா வங்காவின் கணிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மாங்கா கலைஞர் ரியோ தாட்சுகி (Ryo Tatsuki), அவரது எதிர்கால கணிப்புகளால் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றி எதிர்கால கணிப்புகளால் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா உட்பட பலர் உலகில் பிரபலமாக உள்ளனர். அந்தவகையில், ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1980 களில் இருந்து அவர் துல்லியமான பேரழிவு கணிப்புகளைச் செய்து வருகிறார். மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார். அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில், அந்த சம்பவங்கள் அடுத்த சில ஆண்டுகளில் அப்படியே நடந்ததாக கூறப்படுகிறது.

ரியோவின் கூற்றுப்படி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், 2030 ஆம் ஆண்டில் கொரோனா போன்ற ஆபத்தான வைரஸ் வரவிருப்பதாக டாட்சுகி எச்சரித்துள்ளார், இது உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய பாபா வெங்காவின் பல கணிப்புகள் உண்மையாகிவிட்டன. அது என்னவென்றால், 1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், இளவரசி டயானாவின் இறப்பு,1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி ஆகியவற்றை துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது.

புதிய வைரஸ் கொரோனா வைரஸை விட ஆபத்தானதாக இருக்குமா? ரியோ டாட்சுகி 1999 ஆம் ஆண்டிலேயே தனது ‘தி ஃபியூச்சர் அஸ் ஐ சீ இட்’ என்ற புத்தகத்தில் கோவிட்-19 வெடிப்பை முன்னறிவித்திருந்தார். 2020 ஆம் ஆண்டில் அறியப்படாத ஒரு வைரஸின் உச்சத்தை அவர் கணித்திருந்தார், அதுவும் உண்மையாக நிரூபிக்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டில் ஒரு புதிய மற்றும் இன்னும் அழிவுகரமான வைரஸையும் அவர் கணித்தார். கணிப்பின்படி, புதிய வைரஸ் ஏராளமான மக்களைக் கொல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதேபோல், அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதத்தில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார். இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார். இதனால் மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ரியோ டட்சுகியின் கணிப்பு தொடர்பாக ஜப்பான் அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரம் ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இயற்கை பேரழிவு குறித்து தங்கள் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜப்பானிய அதிகாரிகள் இந்த கணிப்புகளை ஆதாரமற்றவை என்றும், அறிவியல் சான்றுகள் இல்லாதவை என்றும் நிராகரித்து, இதுபோன்ற வதந்திகளைப் புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

Readmore: மாணவர்களே..!! மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! கட்டணம் எவ்வளவு..? விவரம் உள்ளே..!!

KOKILA

Next Post

காய்ச்சல் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்...! சுகாதாரத்துறை உத்தரவு...!

Tue Jun 10 , 2025
காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், பள்ளிக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிக அளவில் இருப்பதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்க பள்ளி கல்வித்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்ற மாணவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனால், காய்ச்சல் உள்ள மாணவர்கள் […]
School Corona 2025

You May Like