ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற திருத்தங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரேஷன் கார்டு என்பது மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறவும், பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெறவும் உதவும் ஒரு முக்கிய அரசு ஆவணமாகும். குறிப்பாக அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு ரேஷன் கார்டு அவசியம்.. ரேஷன் அட்டையின் மூலம் தகுதியான குடும்பங்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களைப் பெற முடியும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நலத்திட்டங்களில் பயன்பெற ரேஷன் அட்டை அவசியம். அது மட்டுமின்றி, ஷன் அட்டை ஒரு முக்கிய அடையாள ஆவணமாகவும் செயல்படுகிறது. மேலும் அரசு வழங்கும் பல இலவச திட்டங்களுக்கு ரேஷன் அட்டையே அடிப்படையாக இருக்கிறது.
இந்த நிலையில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற திருத்தங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இனி ஒரு ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு இரு முறை மட்டுமே திருத்தம் கோரி விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது..
அதே போல் டூபிளிகேட் ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டு பிடிஎஃப் டவுன்லோடு செய்ய முடியும் என்று அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.. அரசின் திட்டங்களுக்கு ரேஷன் கார்டில் உள்ள தகவல்கள் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகவும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேஷன் கார்டில் அடிக்கடி திருத்தங்கள் கோரப்படுவதால், அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இதைத் தவிர்ப்பதற்காகவும், அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது…
எனினும் இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்படவில்லை. புதிய கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : மக்களே அலர்ட்.. இன்று இந்த 20 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..



