நோட்..! ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… 30-ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…!

pensions 2025

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.


தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் தகுதியுடைய ஊழியர்களும் கடைசிநேர சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் விரைவில் இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கடைசி நாளுக்குப் பிறகு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற முடியாது.

மேலும், ஏற்கனவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு ஒருமுறை அனுமதிக்கப்படுவார்கள் என்று நிதிச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது. குறைந்தது ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்பாகவோ அல்லது தன்விருப்ப ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவோ இதில் எது முதலில் நிகழ்கிறதோ அப்போது மாறவேண்டும்.

பணியிலிருந்து நீக்கப்படுதல் அல்லது அபராதமாக கட்டாய ஓய்வளித்தல் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நடைபெறுதல் ஆகிய நிகழ்வுகளில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதி அனுமதிக்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட நாளுக்குள் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்வார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் 2025 செப்டம்பர் 30-க்கு பிறகு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுக்க முடியாது.

Vignesh

Next Post

Holiday: 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை...!

Sat Sep 27 , 2025
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி […]
Holiday 2025

You May Like