மாணவர்கள் கவனத்திற்கு…! பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றை கடைசி நாள்…!

money School students 2025

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதர பிற்படுத்தப்பட்டோர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் (‘யசஸ்வி’) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025- 26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் பயனடைந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) உள்ள Renewal Application என்ற இணைப்பில் சென்று OTR எண் பதிவு செய்து 2025-26-ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இந்த ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட தளத்தில் செல்போன் எண், ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து புதிய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை அணுகலாம். உதவித் தொகை பெற மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை கல்வி நிறுவனங்கள் அக்.15-ம் தேதிக்குள் சரி பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வடகிழக்கு பருவமழை.. தயார் நிலையில் இருக்க வேண்டும்...! மின்வாரிய அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு...!

Tue Sep 30 , 2025
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றத்து. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகள், பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் […]
Tn EB Bill 2025

You May Like