இன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் நடந்து வருவதாக இந்திய ராணும் தெரிவித்திருந்தது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த துப்பாக்கிச்சூடு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் உதம்பூர் மாவட்டத்தில் […]

8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது முதலே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் 8-வது ஊதியக்குழுவில் முக்கிய உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் […]

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நேற்று புறப்பட்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று ஃபால்கன் ஏவுகணை மூலம் டிராகன் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விமானப்படை விமானி சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் சென்ற டிராகன் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி […]

ஜூலை 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதுகுறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அந்த வகையில் ஜூலை 1 முதல் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பது குறித்து பார்க்கலாம். தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் ஐ.ஆர்.சி.டி.சி வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல், ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பும் தேவைப்படும், இது அடையாள சரிபார்ப்புகளை […]

நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின் முழு நேரமாக நடிக்க செல்லலாம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் திரு. குலாம் தஸ்தகீர் அவர்கள் மீது, போதைக் […]

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்டெடுக்கப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உள்ள ஒரு சில நிமிடங்களிலேயே மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரே […]

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.. இது வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு […]

அமர்நாத் யாத்திரைக்கு ஒரு வாரம் முன்னதாக, இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் பற்றிய தகவலை பாதுகாப்புப் படையினர் பகிர்ந்து கொண்டனர், இந்த நடவடிக்கை தற்போது பிஹாலி பகுதியில் நடந்து வருவதாகக் கூறினர். எனவே இந்த இடத்தின் பெயரே இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த […]

போதை பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை […]

பக்கவாதத்தின் 5 முக்கியமான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று பக்கவாதம். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் அதிகமான இளைஞர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரித்து விரைவான நடவடிக்கை எடுப்பது ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும்.. இந்த அறிகுறிகளை அறிந்து செயல்படுவது வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பக்கவாதத்தின் 5 முக்கியமான […]