தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தில் கீழ் அடுக்குகளில் கீழ் திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை […]

எந்த காலத்திலும் டெல்டா மாவட்டங்கள் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டங்களை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. இந்த தீர்மானத்தின் மீது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து வருகிறார்.. அப்போது “ தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் பழுப்பு நிலக்கரி […]

கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.. கடந்த 3-ம் தேதி இரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.. அப்போது ரயிலில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட அதில் […]

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்கள் காணொளியில் ஆஜராகலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.. கொரோனா முதன்முதலில் பரவத்தொடங்கிய போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.. ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.. அந்த வகையில் நீதிமன்றங்களிலும் காணொளி வாயிலாக விசாரணை நடைபெற்று வந்தது.. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் முழுமையாக காணொளி வாயிலாக விசாரணை […]

12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாய பேரரசு தொடர்பான அத்தியாயங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நீக்கியதாக தகவல் வெளியானது.. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12-ம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி முகலாய பேரரசு தொடர்பான அத்தியாசங்களை நீக்கி உள்ளது.. இது CBSE, மற்றும் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பிற மாநில வாரியங்கள் உட்பட அனைத்து வாரியங்களின் […]

எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]

சாவர்க்கரைப் பற்றி பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடந்த சாவர்க்கர் கௌரவ யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, சில தவறான புரிதல்களால் தான் இந்த கருத்தை வெளியிட்டார் என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும் என்று தெரிவித்தார்.. மேலும் ராகுல்காந்தி தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் […]

Ibuprofen என்பது வலி நிவாரணி மருந்து ஆகும்.. பொதுவாக தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி, பல்வலி, தசை வலி மற்றும் மூட்டுவலி போன்ற வலிகளுக்கு இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மருந்து Combiflam, Flexion, Ibugesic Plus, Adiflam, Zupar மற்றும் Aimol என்ற பெயர்களில் கிடைக்கிறது. பொதுவாக நிபுணர் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்றி மக்கள் பொதுவாக இந்த மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் மருத்துவர்களின் […]

நேட்டோ அமைப்பில் பின்லாந்து 31வது உறுப்பு நாடாக இணைந்துள்ளது.. உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் (NATO) மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இதில் ஃபிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் நேட்டோ அமைப்பில் பின்லாந்து 31-வது நாடாக இணைந்துள்ள்ளது.. நேட்டோவின் 31வது உறுப்பினராக பின்லாந்தை வரவேற்பதாக தெரிவித்தார்.. மேலும் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்றும் கூறினார். அமெரிக்கா, […]