மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சுமார் 15,400 டன் LPG உடன், இந்தியக் கொடியிட்ட ஒரு கப்பல் ‘ஹார்முஸ் நீரிணையை’ வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) தெரிவித்தது. அந்தக் கப்பல் தற்போது மும்பைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்று துறைமுகம் கூறியது; மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய பிறகு, JNPA-வை வந்தடைந்த இத்தகைய […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.. இதை தொடர்ந்து பல்வேறு மனுக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ கடந்த ரமலான் பண்டிகையின் போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது.. 2 வாரத்திற்கு இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.. மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை அமெரிக்கா – ஈரான் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.. ஆனால் ஈரான் மீதான போர் நிறுத்தம் தொடரும் என்றாலும், அந்த போர் நிறுத்தத்தில் லெபனான் விதிவிலக்கு என்று இஸ்ரேல் கூறியிருந்தது.. அதன்படி லெபனான் […]

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. பெரியகுளம் தனி சட்டமன்ற தொகுதியில் சக்திவேல் என்பவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.. அவருக்கு ஆதவராக திருமாவளவன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது அவரின் பிரச்சார வாகனத்தில் விடுதலை […]

நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக மத்திய அரசு சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது, இது சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும். தற்போதைய சர்வதேச சூழ்நிலையின் தாக்கம் இருந்தபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடர்வதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், தேவையற்ற அவசர கொள்முதல்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கக்கூடிய சமீபத்திய உலகளாவிய […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. காலையில் கண் விழிக்கும் கணம் முதல், இரவில் உறங்கச் செல்லும் கணம் வரை, திரைகளைப் பார்ப்பது அனைவருக்குமே ஒரு பழக்கமாகிவிட்டது. ஆனால், இந்தப் பழக்கம் நம் தூக்கத்தை மெல்ல மெல்லத் திருடிக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக இரவில் செல்போன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் கண்களுக்கு மட்டுமே உரியவை அல்ல; அவை மூளையின் செயல்பாட்டிலும் தீவிரமான தாக்கத்தை […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சி தலைவர்கள் குறித்து நாகரிகமற்ற முறையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் நேற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியது சர்ச்சையானது. அப்போது “ திமுக காலத்தில் வெள்ளம் வந்ததா? வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்றும் வரவில்லை.. அப்படி வந்திருந்தால் இந்த முதலமைச்சரே கொரோனாவில் காணாமல் […]

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதாகவும், மாற்றத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், டிரம்ப் இவ்வாறு கூறினார்.. மேலும் தனது பதிவில், “ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை, கொடிய முறையில் தாக்கி அழிப்பதற்குப் பொருத்தமான மற்றும் அவசியமான கூடுதல் வெடிமருந்துகள், […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சி தலைவர்கள் குறித்து நாகரிகமற்ற முறையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் நேற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியது சர்ச்சையானது. அப்போது “ திமுக காலத்தில் வெள்ளம் வந்ததா? வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்றும் வரவில்லை.. அப்படி வந்திருந்தால் இந்த முதலமைச்சரே கொரோனாவில் காணாமல் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]