தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை சீனா வரவேற்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை தியான்ஜினில் SCO உச்சிமாநாட்டை சீனா நடத்தும்… SCO தியான்ஜின் உச்சிமாநாட்டிற்காக வரும் பிரதமர் மோடியை சீனா வரவேற்கிறது. அனைத்து தரப்பினரின் […]

வனவிலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. வேடிக்கையான சில வீடியோக்கள் வைரலானாலும், விலங்குகளின் ஆபத்தான வீடியோக்களும் கவனம் பெற்று வருகின்றன.. இதுபோன்ற ஒரு வீடியோ, இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளைஞர், முதலையுடன் ஆபத்தான சாகசத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. முதலையிடம் இருந்து சில இன்ச் தொலைவில் நிற்கும் அந்த இளைஞர், கையில் ஒரு இறைச்சித் துண்டைப் […]

சென்னையில் தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.. நீட் தேர்வு கூடாது, கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும், தொடக்க நிலை முதல் உயர்கல்வி வரை தமிழ் தான் முதன்மை மொழி, ஒவ்வொரு கல்லூரியிலும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் […]

பொதுமக்களின் பரிவர்த்தனைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையும் சீரான முறையில் கிடைப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்யும் என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் குறித்து அரசு விளக்கம்: ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வெளிவருவது நிறுத்தப்படும் என்று பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டது. நிதி அமைச்சகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்களின் பரிவர்த்தனைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து […]

60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த நிலையில் இந்த புதிய மசோதாவை மத்திய அரசு இன்று முறையாக வாபஸ் பெற்றது. திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்படும்.. […]

3 முறை நீட் தேர்வில் தோல்வி… ஜேஇஇ ரேங்க் இல்லை.. கணினி அறிவியல் பின்னணி இல்லை. பெரும்பாலான மாணவர்கள் இதுபோன்ற சூழலில் தோற்றுப் போனதாக எண்ணி சோர்வடைவார்கள்.. ஆனால் சஞ்சய் அப்படி நினைக்கவில்லை… இன்று, அவர் புனேவில் உள்ள சின்ஜெண்டாவில் அசோசியேட் டேட்டா சயின்டிஸ்டாக முழுநேர வேலை செய்கிறார். பாரம்பரிய பொறியியல் வழிகளின் மூலம் அவர் இந்த நிலையை அடையவில்லை.. சென்னை ஐஐடியில் பிஎஸ் படிப்பில் டேட்டா சயின்ஸ் அண்ட் […]

Zelo Electric நிறுவனம் தனது Knight+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.. இது ரூ.59,990 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் பிரீமியம் அம்சங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தூரம் செல்ல முடியும்? Knight+ ஆனது 1.8kWh போர்ட்டபிள் LFP பேட்டரியால் இயக்கப்படுகிறது, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ என்ற வரம்பை வழங்குகிறது. இதன் 1.5kW மோட்டார் 55 கிமீ/மணி வேகத்தில் மென்மையான பயணத்தை உறுதி செய்கிறது, இது […]

உங்கள் குழந்தைகளும் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுகிறார்களா..? ஆம், எனில், கவனமாக இருங்கள்..! டிவி அல்லது ஸ்மார்ட்போன் அல்லது டேப்களில் கார்ட்டூன்கள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டால், குழந்தைகளை எளிதாக சாப்பிட வைக்கலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு.. ஏனெனில் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் தீங்குகள் ஏராளம். இந்தப் பழக்கம் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.. […]

தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகள் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. ஆனால் இவர்களில் யாரும் இந்தியாவின் பணக்கார நடிகை இல்லை.. ஹுருன் ரிச் லிஸ்ட் 2024 இன் படி, இந்தியாவின் பணக்கார பெண் நடிகையாக ஜூஹி சாவ்லா முதலிடத்தில் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஜூஹி ரூ. 4,600 கோடி சொத்து மதிப்பை குவித்துள்ளார்.. […]