எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு […]

பெங்களூரு-டெல்லி விமானத்தை இயக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானி மயங்கி விழுந்தார். பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு விமானத்தை இயக்குவதற்கு சற்று முன்பு ஏர் இந்தியா விமானி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் டெல்லி விமானத்தை இயக்க விமான நிறுவனம் மற்றொரு விமானியை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. “ஜூலை 4 அதிகாலையில் எங்கள் விமானிகளில் ஒருவருக்கு மருத்துவ […]

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் வா. மு. சேதுராமன். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.. நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம் உள்ளிட்ட பல நூல்களை சேதுராமன் இயற்றி உள்ளார். ஒரு லட்சத்திற்கும் அதிமான கவிதைகளை […]

20 ஆண்டுகளுக்கு பிறகு, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று வோர்லியில் நடைபெறும் ஒரு கூட்டுப் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி அரசாங்கம் சமீபத்தில் மாநிலத்தின் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கும் முடிவை வாபஸ் பெற்ற பிறகு, ‘அவாஜ் மராத்திச்சா’ (மராத்தியின் குரல்) என்ற வெற்றிப் பேரணியை இரு கட்சிகளும் […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி அசத்தி உள்ளனர். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு வகை செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளனர். மருத்துவ உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. இது அனைத்து ரத்த வகைகளுடனும் பொருந்தும் என்பது தான் கூடுதல் சிறப்பு.. இந்த செயற்கை ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.. ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் புரதமான ஹீமோகுளோபின் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. […]

பாகிஸ்தானின் உள்ள தனது அலுவலகங்களை திடீரென மூடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. லட்சக்கணக்கான ஊழியர்களில் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2000-ம் ஆண்டு, மார்ச் 7-ம் தேதி பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. கால் நூற்றாண்டு காலமாக, இந்த நிறுவனம் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. […]

கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 2 பேருக்கு நிபா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாநில சுகாதாரத் துறை கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலக்காடு மற்றும் மலப்புரத்தை சேர்ந்த இருவருக்கு நிபா பாதிப்பு உறுதியானது. கூடுதல் ஆய்வுக்காக மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்பட்டுள்ளன. பாலக்காடு […]