ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
பலர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் அருந்துகிறார்கள். மனதைப் புத்துணர்ச்சியடையச் செய்ய இந்த உற்சாகமான பானத்தை காலையிலும் மாலையிலும் குடிப்பது வழக்கம். இருப்பினும், தேநீர் தயாரிக்கப்பட்டு குடிக்கும் விதம் சில நேரங்களில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள காஃபின் குறைந்த அளவில் உடலைச் சென்றடைந்தால் நல்லது. ஆனால் நீங்கள் அதிகமாக தேநீர் குடித்தால், இந்த கலவை குடல் ஆரோக்கியத்தையும் கல்லீரலையும் சேதப்படுத்தும். அதனால்தான் தேநீர் […]
உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு முக்கிய தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சுகாதார நிபுணர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கத் தொடங்கியுள்ளனர். Mpox வைரஸின் ஒரு புதிய வகை (strain) தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண வகை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு “மறு சீரமைப்பு வைரஸ்” ஆகும். அதாவது, முன்பு இருந்த இரண்டு பழைய Mpox வகைகளின் மரபணு தகவல்கள் ஒன்றிணைந்து உருவான புதிய வைரஸ் […]
நாட்டின் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. விவசாயிகளுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சூழலில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அவர்களுக்காக ஒரு சிறப்பு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் […]
இந்திய பொருளாதாரம் மற்றும் நெறிமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஆச்சார்ய சாணக்கியரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவர் இருபதாம் நூற்றாண்டின் ஞானி மற்றும் மிகவும் கற்றறிந்த மனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தனது வாழ்நாளில், ஆச்சார்ய சாணக்கியர் பல மனித பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டார். அவற்றில், மனிதகுலத்தின் நலனுக்காக பல முக்கியமான விஷயங்களை அவர் விளக்கினார். ஆச்சார்ய சாணக்கியர் தனது நீதி சாஸ்திரம் என்ற புத்தகத்தில் மனித நடத்தை தொடர்பான […]
3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]
வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றார்.. தாரிக் ரஹ்மான் தலைமையில், பங்களாதேஷ் தேசிய கட்சி ( Bangladesh Nationalist Party BNP)யைச் சேர்ந்த வெற்றி பெற்ற எம்.பி.க்களும் செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள தேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றனர். இந்த நிகழ்வு, நாட்டின் அரசியல் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்தப் பதவியேற்பு விழா, பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற 13-வது பாராளுமன்றத் தேர்தலில் […]
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் (BSNL), 2026 ஆம் ஆண்டிற்கான 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (SET) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, மார்ச் 7 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் மொத்த பதவிகள்: 120 தொலைத்தொடர்புத் துறை: 95 நிதித் துறை: 25 சம்பளம் : ரூ.24,900 – ரூ.50,500 வரை. முக்கிய தகவல் பணியமர்த்தல் நிறுவனம்: […]
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]
2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் பிரதியுஷா.. அவர் விஜயகாந்துடன் தவசி, முரளி உடன் மனுநீதி ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல் பூக்கள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.. நடிகை பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்ட்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.. ஆனால் இவர்களின் காதலுக்கு சித்தார்த் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இதனால் கடந்த 2002-ம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து […]

