fbpx

நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். சென்னையில் நேற்று …

சேலம் மாவட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான வரியினங்கள் மற்றும் கட்டணங்களை எதிர்வரும் 28.2.2025 -ம் தேதிக்குள் பொதுமக்கள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் …

புதிய ஃபாஸ்டேக் விதி குறித்து மத்திய போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

மத்திய போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஃபாஸ்டேக் குறியீட்டை கண்டறிவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பும், கண்டறிந்த 10 நிமிடங்களுக்குப் பிறகும் செயல்பாட்டில் இல்லாத ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளை நிராகரிக்கும் விதியை மாற்றுவது தொடர்பான சில நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிக்காட்டி, இந்திய தேசிய …

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 22 சங்க போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தனர். அதில், இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் ஸ்டிரைக் நடத்துவோம் என சில நாட்களுக்கு முன் கூறியிருந்தனர். இதனால் இன்று பேருந்துகள் இயங்குமா என்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர்.

தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தப் …

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் …

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 …

தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு “தொழில்முனைவோருக்கான ChatGPT” பயிற்சி இன்று EDII-TN வளாகத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக …

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி …

வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும், மாதம் தோறும் ரூ.2,500 க்கும் அதிகமாக வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாடு வளர்ச்சிப் பாதையில் …

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக சிறப்பு மேளா வரும், 21, 28 மற்றும் மார்ச்,10-ம் தேதி நடக்கிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

அஞ்சல்துறை சார்பில் சுகன்யா சம்ரித்தி எனும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் …