1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து […]
கூல்ஸ்கல்ப்டிங் எனப்படும் எந்திரத்தைப் பயன்படுத்தி கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டிருந்த உடல் எடைக் குறைப்பு விளம்பரம் புகார் மற்றும் விளம்பர கண்காணிப்பு மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. பரிசோதனையில், இந்நிறுவனம் , எடை இழப்பு பற்றிய மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளை […]
வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். சமூக நலத்துறையின் சார்பில் மகளிர் வாழ்வாதாரத்தை பொருளாதாரம் ரீதியாக மேம்படுத்த ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் […]
நீங்கள் வாங்கும் சொத்து அல்லது உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு பட்டா எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம். நில பட்டா வாங்க, முதலில் உங்கள் சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குள் வருகிறதோ அங்குள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுக வேண்டும். பின்னர், இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது அல்லது நேரில் சென்று விண்ணப்பிப்பது என இரண்டு வழிகளில் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசின் மின்-சேவைகள் இணையதளமான eservices.tn.gov.in சென்று, […]
அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு […]
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யக் கூடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடி செலவில் 2,200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்ய இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பு ‘தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து மாசற்ற மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 20,000 மெகாவாட் […]
தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு […]
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரத்தையே கடந்த ஜூலை மாதம் தொடங்கிவிட்டார். 3-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்றுடன் நிறைவு செய்த பழனிசாமி. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் தொடங்குகிறார். இதனிடையே வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி […]
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் பேசிய அவர்: திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி […]
தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை இணை மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட பணியாளர்கள் கண்காணிக்க அறிவுரை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, […]

