காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி​யாக இருந்த சங்​கர் ஜிவால் ​பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்​படை​யில் தற்​போது டிஜிபிக்​களாக உள்ள சீமா அகர்​வால், ராஜீவ்கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் டிஜிபி​யாக வரலாம் என்ற எதிர்​பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 மாதங்களில் […]

வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் […]

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ கடன் பெற விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 லட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம்‌ என […]

ஆன்லைன் முதலீடு தொடர்பாக வரும் போலியான URL Link-களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகர காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்; சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் […]

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் (ஐடிஐ), 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஜூலை 31 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான […]

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது. ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பதை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று 2021 அக்டோபர் 11-ம் […]

ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வது சுற்றுலா பயணம் என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு […]

தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 […]

திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 2018 ல் சமக்ர சிக்க்ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டமும் சேர்க்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகம் இணையாதால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு என வர வேண்டிய தொகையை மத்திய […]

தமிழகத்தில் பல இடங்களில் காய்ச்சல் பரவி வருகிறது.. திறந்தவெளி இடங்கள், வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் இரவில் கனமழை பகலில் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமானோர் […]