தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர்‌ மகளிர்‌ மற்றும்‌ ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 இலட்சம்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ […]

ரேஷன் கடைகளுக்கு மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருகிறது அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை சிலர்‌ […]

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 26) முதல் ஜூலை 1-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு […]

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜூலை 10 முதல் 17-ம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள […]

தேர்வு செய்யப்பட்ட 2346 ஆசிரியர்கள் குற்ற பின்னணி குறித்து ஆய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 2,346 பேர் கொண்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. […]

சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் இன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர்ப்பு மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்திற்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு 18.06.2025 […]

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ம் […]

ஆலந்தூர், மடிப்பாக்கம், திருவான்மியூர்,பல்லாவரம், போரூர், தாம்பரம்,ஆவடியில் இன்று மின் நிறுத்தம். இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம். சென்னையில் இன்று மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆலந்தூர், மடிப்பாக்கம், திருவான்மியூர், பல்லாவரம், போரூர், தாம்பரம்,ஆவடியில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்நிறுத்தம் […]

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வார இறுதி நாட்களையொட்டி 27, 28-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 595 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, […]