மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் 7432 பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்க மத்திய அரசு ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்தூஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் 3,438 சார்ஜிங் நிலையங்களும், […]

திக்கொடியனின் ‘மகாபாரதம்’ நாடகத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்ற பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமான விக்ரமன் நாயர் காலமானார். நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயர் கோழிக்கோடு குண்டுபரம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சாமோத்திரி குருவாயூரப்பன் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்ற […]

தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது இயற்கை பேரிடர்கள் காரணமாகவோ தொலைத்தொடர்பு சேவையில் பெரும் தடங்கல் ஏற்படும்போது, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அதனை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் தெரிவிப்பதில்லை என்பது பல நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, எல்லைப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் நாள் கணக்காக இந்தப் பெரும் தடை நீடிப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தரமான சேவைகள் கிடைப்பதில்லை. இந்தப் பெரும் தடைகளுக்கான அடிப்படைக் காரணங்களை புரிந்து கொள்ள, உள்ளூர் […]

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 21 நாட்களில் கடன் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாமக எம்‌.எல்.ஏ ஜிகே மணி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கிக்கடன் பெற மாதம் ஆறு முறை […]

மாணவர்கள் உதவித் தொகை பெற கட்டாயம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம்‌ கல்வியாண்டில்‌ 9ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை கல்வி பயிலும்‌ ஆதிதிராவிடர்‌ / பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர்‌ மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணாக்கர்களின்‌ வங்கி கணக்கு எண்‌, ஆதாருடன்‌ இணைக்கப்படுவது கட்டாயமாகும்‌. […]

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 31-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.01.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் […]

குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டுமானால், அதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவது, பேரிடர் காலத்தில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை மேற்கொள்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, உணவுப் பொருட்களை வழங்குவது, தேர்தல்களை நடத்துவது என […]

பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு மொத்தம்‌ ரூபாய்‌ 4000 கோடி மதிப்பில்‌ ரூபாய்‌ 2,000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 10 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ மற்றும்‌ ரூபாய்‌ 2000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 30 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. போட்டி ஏலக்‌ கேட்புகள்‌ […]