வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறித்து இன்று முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர […]

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும். டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். […]

காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது. தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து […]

சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரைம் இழந்து […]

அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்க மாணவர்​களுக்​கும் அரை​யாண்​டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்​டுமென பள்​ளிக் கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் இயக்கம் கடந்த ஜூலையில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக தேர்வான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளின்படி அடிப்படை கற்றல் விளைவுகள் […]

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]

சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் வாயிலாக செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. சென்னையில் நிலவும் வெறிநாய்க்கடி பிரச்சனைக்கு தீர்வு காணும் முறையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்தல், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மைக்ரோ சிப்பிங் பொருத்துதல் ஆகியவை […]

உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌ தமிழகத்தில் உள்ள ஹோட்டல்களில் சமையல் அரங்கு, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், கழிவறை உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக உணவகங்களில் பணியாற்றக் […]

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காஞ்சிபுரம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்திக்கும் நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவுறுத்தல்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ளார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது […]

கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் வரும் 25, 26-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பில் ரூ.208.50 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி இப்பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். மேலும், அன்று மாலை கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில் துறை […]