சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் […]
சரியாக மதிப்பு நிர்ணயம் செய்யாததால் அரசுக்கு கிடைக்கப் பெறும் வருவாய் தடுக்கப்படுகிறது. இதனை தடுக்க கீழ்கண்ட நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஆவணத்தில் சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும் மனைமதிப்பு இருக்கும் நிலையில் மாவட்டவருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்செய்யும் போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில் 80% கீழ் இருக்கும் பட்சத்தில் படிவம் 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம்செய்யப்படும் […]
பஞ்சாப் & சிந்து வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் CHIEF FINANCIAL OFFICER பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் […]
இந்திய-சீனா எல்லையில் உள்ள தொலைதூர கிராமப் பகுதிகளில் இலவச தூர்தர்ஷன் டிடிஎச் இணைப்புகளை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும் என்றும், இந்த பகுதிகளில் தொலைத்தொடர்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. லே பகுதியிலிருந்து 211 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லடாக்கின் கர்சோக் […]
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – வரும் 20ம் தேதி முதல் டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவங்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய உத்தரவு. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். […]
ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் […]
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், நரேந்திர மோடி அரசாங்கம் நடுத்தர வர்க்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது, ஆண்டுக்கு ரூ.7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டபோது, சில இடங்களில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசின் […]
ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தொடக்கக் கல்வித் துறை, மாநகராட்சி, […]
தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட முப்படையில் பணிபுரிந்து வெளிவந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு சூறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.07.2023 அன்று மாலை 04.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தை […]