பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் […]
போட்டி கட்சிகள், வேட்பாளர்களுக்கு எதிரான காணொலி காட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கை 2025 அக்டோபர் 6 அன்று வெளியிடப்பட்டதை அடுத்து, நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளின் சமூக ஊடகம் உட்பட இணைய தளத்தில் […]
காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. வரலாற்று […]
காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், 5 மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட கட்சி ஆகும். அண்ணாதுரை அவர்களின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆர் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு […]
கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல […]
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஏராளமானோர் இனிப்பு, கார வகைகளை வாங்குவார்கள் என்பதால், அதற்கான இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. விதிமுறை உணவு பொருட்களை மற்ற வணிகர்களுக்கு விற்பனை செய்யும் முன் அவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் / பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதை […]
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை […]
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், அக்டோபர் 9 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், […]
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு முழுமையாக விசாரிக்கப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நாமக்கல்லில் பேசிய அவர்; விசைத்தறி தொழிலாளர்களின் பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துள்ளனர். திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை […]

