ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று விடுவித்தார். பி.எம்.கிசான் என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறும் வகையில், இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை […]
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இந்தக் காய்ச்சல் எளிதில் குணமாவதில்லை. சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி […]
கரூர் துயரத்தால் முடங்கியிருக்கும் விஜய்யிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருமே நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டனர். மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனும் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் பாஜக தலைவர் நட்டா […]
திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய “சக்தி” புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் […]
திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை. இது குறித்து அண்ணாமலை தனது அறிக்கையில்; மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், கடந்த 1951- ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் திரு. குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனை, கடந்த சுமார் 60 ஆண்டுகளாக, ஆதீனம் சார்பாக, […]
கல்விக்கான நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் நலனில் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; நடப்பு கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் டிசம்பருக்குள் முடிக்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான நிதியை தான் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுவாகவே மத்திய […]
கமல்ஹாசனின் நடுநிலையான பேச்சு, உங்களைப் போன்ற என்டெர்டெய்னர்களுக்கு புரியாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் மொழியால் போலிப் பணிவும், நரம்பில்லாத நாக்கால் தடித்த வார்த்தைகளை தரம் பார்க்காமல் எல்லோர் மீதும் கொட்டுவதும் வழக்கமாக கொண்ட பிஜேபியாலேயே புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை இன்று எங்கள் தலைவரைப் பற்றி, […]
போர்க்கால அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப் பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தாங்கள் பாடுபட்டு விளைவித்த நெல் மணிகளுடன் பல நாட்கள் வெயிலிலும், மழையிலும் […]
பாரம்பரிய ஞானமும், நிலையான வழிமுறைகளும் இந்திய வேளாண்மையின் ஆற்றல் சக்தியாக இருந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் பாரம்பரிய விவசாய வளர்ச்சித் திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டம் இந்தியாவின் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் ஆணிவேராக […]
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் ரூ.5,000 மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில் “திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தற்போது ரூ.4,000/– ஒய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.4,000/– லிருந்து ரூ.5,000 ஆக உயர்வு செய்யப்படும் […]

