தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் […]
கரூர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அமைச்சர் அன்பில் மகேஷ் கரூர் விரைந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் […]
விஜய் கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து நபர்கள் அவர் மீது செருப்பு தூக்கி வீசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் […]
கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், கரூர் மாவட்ட […]
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வரும் நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் தனது கண்டனத்தை […]
கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை […]
குறைவான எடையுடன் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பைத் தடுக்க பிசிஜி தடுப்பூசி அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1000 குழந்தைகளுக்கு 24.9 என்ற அளவில் உள்ளது. இது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள விகிதத்தைக் காட்டிலும் அதிகமானதாகும். பச்சிளங்குழந்தைகளின் இறப்பிற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக குறை மாதத்தில் பிறப்பது அதாவது 37 வாரங்கள் முடிவடைவதற்குள் பிறக்கும் குழந்தைகள், இரண்டாவதாக பாக்டீரியா கிருமிகள் மூலம் […]
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள […]
தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தெகுதி-1 மற்றும் IIA)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு 28.09.2025 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் […]
கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனத்தில் பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கான உற்பத்தியுடன் கூடிய பணப்பலன் அறிவித்துள்ளது மத்திய அரசு. நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இல்லாத பிற பணியாளர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய பணப்பலனாக 1,03,000 ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலக்கரி தொழில்துறைக்கான நிலைக்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கோல் இந்தியா நிறுவனத்தில் […]

