பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரில் அடிக்கப்பட்டுள்ள பேனரில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை. தமிழக பாஜகவினர் பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை இருவார நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, படகு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரதமர் மோடியின் சாதனைகள், […]

ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு இலவசமாக மளிகை, சர்க்கரை, எண்ணெய் வழங்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் கடந்த தீபாவளிக்கு முன்பாக திறக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரை இலவசமாக தரும் பணி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரேஷனில் அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷனில் அரிசி தரப்படவில்லை. அரிசிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் ரேஷனில் விடுபட்ட […]

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பரில் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 10-ம் தேதி […]

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய […]

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று காலை கரையை […]

வரும் 28-ம் தேதி அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய வேண்டும். மேலும், அனுமதிச்சீட்டில் (Hall Ticket) உள்ள அறிவுரை (Instruction)களை கவனமாக படித்து வர வேண்டும். காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் […]

பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வழக்குகள் அதிகரித்துவிட்டன என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேசிய அவர்; அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. போதுமான ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் […]

தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. இணையதளம் மூலம் இந்த விண்ணப்பங்களை 24.10.2025 வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பொறுப்புக்கு பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவால் ஆய்வு செய்யப்படும். தகுதி, அனுபவம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வுக்குழு இறுதி தேர்வை மேற்கொள்ளும். […]

மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான ஏ-2 படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சாராத நிறுவனங்களில் தற்காலிக பணி நிமித்தமாகவோ அல்லது வெளிநாட்டு சேவைக்காகவோ பணி புரிந்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத பட்சத்தில், படிவம் ஏ-2-வை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனத்தின் துறை சார்ந்த அதிகாரிகளிடம் […]

தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் தேர்தல் ஆணையம் கடந்த ஆறு மாதங்களில் 29 முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தாமதங்களை குறைக்கும் வகையில் 30-வது முன் முயற்சியாக தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது. இதன்படி வாக்குகளை எண்ணும் பணி 2 பிரிவுகளைக் கொண்டதாகும். தபால் வாக்குகளை எண்ணுதல் மற்றும் மின்னணு […]