ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு விடுபட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: கடந்த 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் இல்லாத பதவிகள்) அடங்கிய வேதியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு), உதவி மேலாளர் (சேமிப்பு கிடங்கு), துணை மேலாளர் (தர நிர்ணயம்) உள்ளிட்ட பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியுள்ள தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய […]
“ஆபரேஷன் வீட் அவுட்”- ன் கீழ் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் 108.67 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் “ஆபரேஷன் வீட் அவுட்” நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 13-14, 2025 அன்று 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் நீரில் வளரக்கூடிய போதை தரும் […]
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதில் அதிகளவில் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துயை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் நலந்து கொள்ள உள்ளனர். எனலே. […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர் பணிகளையும், தனித்திறன்களை வளர்ப்பதுடன், சமூக வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அளிப்பதற்கும் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; என்எஸ்எஸ் சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்பட […]
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். சென்னையில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-6ல் பி.கெனால் சாலையில் உள்ள காளி கோயில் திறந்தவெளி இடம். மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம். […]
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இஸ்லாமிய மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் உலமாக்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறப்பின் அவரது வாரிசுதாருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்படுவதோடு, 1 […]
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் விவசாய […]
தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களிலும், […]
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்திலேயே 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேசன், […]

