வெளிநாடுகளில் வேலை தேடுவோர் போலி முகமைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல். பதிவு செய்யப்படாத போலி ஆட்சேர்ப்பு முகவர்களால், வேலை வாய்ப்பு தருவதாக ஏமாற்றப்படுவதாலும், ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை அதிகக் கட்டணம் வசூலிப்பதாலும், வெளிநாட்டு வேலை தேடுபவர்களில் ஏமாற்றப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தப் பதிவு செய்யப்படாத / சட்டவிரோத முகவர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து உரிமம் பெறாமல் செயல்படுகிறார்கள், இது வெளிநாட்டில் வேலை செய்வதற்கான எந்தவொரு ஆட்சேர்ப்புக்கும் […]

வானிலை முன்னறிவிப்பு, பருவநிலை ஆய்வுகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்; புவி அறிவியல் துறை ஏற்கனவே ஒரு குறுகிய கால திட்டத்தைக் கொண்டுள்ளது. இப்போது 2047-ம் ஆண்டில் இந்திய தற்சார்பு திட்டத்தை உருவாக்க அமிர்த காலத்துக்கான திட்டத்தை வகுத்து வருகிறது. இது பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதில் […]

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நாளை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கைத்தறி நெசவாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வினை கருத்திற் கொண்டும், கைத்தறி நெசவாளர்களை நோய்களில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் […]

வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை ரூ.42,000 கோடி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிமை கோரப்படாத தொகை என்றால் என்ன..? அதனை பெற வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். இந்தியாவில் உள்ள வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட சில விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்குகளை இயக்க சில விதிகள் உள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் […]

உத்தரபிரதேசத்தில் அதிக குளிர் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடுமையான குளிர் காரணமாக மக்கள் வெளியே செல்ல சிரமமாக உள்ளது. இந்த நிலையில் ஜலான் மாவட்டத்தில் நிலவும் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட அடிப்படைக் கல்வி […]

பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33,500 பள்ளிகளில் சுமார் 3 லட்சம் தேவைகள் இருப்பது தெரியவந்துள்ளன. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் 2009, பள்ளி மற்றும் குழந்தைக் கல்வியின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு நோக்கத்திற்காக அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை உருவாக்குகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு […]

போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், மாநகர போலீசாரால் கைது கடந்த மாதம் நவம்பர் 6 ஆம் தேதி, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அரசு சாரா தனியார் நிறுவனமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை உடன் இணைந்து கல்வித் திட்டங்களை மேற்கொள்வதற்கான அட்டவணை நிகழ்ச்சி நிரலை […]

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் சின்ன குப்பம் பெரிய குப்பத்தில் உள்ள மக்கள் அனைவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அப்பகுதிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறலுடன் மயக்கம் அடைந்தனர். ரசாயன வாயு கசிவால், அப்பகுதியை சேர்ந்த […]

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கியது. மத்திய , மாநில அரசு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Material Management உள்ளிட்ட பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 6 முதல் 15 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக […]