பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். சென்னையில் இன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-6ல் பி.கெனால் சாலையில் உள்ள காளி கோயில் திறந்தவெளி இடம். மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம். […]
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மற்றும் பயிலவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இஸ்லாமிய மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் உலமாக்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறப்பின் அவரது வாரிசுதாருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்படுவதோடு, 1 […]
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் விவசாய […]
தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், மதுரை, சேலம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களிலும், […]
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து அந்தந்த மாவட்டத்திலேயே 7 நாட்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேசன், […]
மகன்கள் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால்தான், எத்தனாலை அதிகளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கியது. பின்னர், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் […]
தமிழக அஞ்சல் துறை சார்பில், நடக்க உள்ள குறை தீர்க்கும் முகாமுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை 22-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; டாக் சேவா ஜன் சேவா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக வட்டம் அஞ்சல் துறை சார்பில், வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,832 […]
மிருகக்காட்சியில் பறவைகள் அல்லது இடம்பெயர்வு பறவைகளில் நீர் பறவைகளின் புதிய இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்று டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1, 2025 க்குப் பிறகு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட எந்த மாதிரிகளிலும் ஹெச்5என்1 பறவை காய்ச்சல் வைரஸ் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் உள்ள எந்த பாலூட்டிகளுக்கும் இன்று வரை இந்த பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த விலங்குக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் […]
அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிரிவு மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா…? உங்களை பற்றி தனிப்பட்ட […]

