கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம உதவியாளர் பணி என்பது தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு ஆகும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளர்களுக்கான வயது வரம்பு தொடர்பாக, […]
13,217 வங்கி பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை ஐபிபிஎஸ் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன. Office Assistants (Multipurpose), Officer […]
திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15- ம் தேதி வரை நடைபெறும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை https://deb.ugc.ac.in இணைய தளத்தில் அறிந்து […]
தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய […]
தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு தொடர்பான வழக்கை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் […]
அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் […]
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் மானிய தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சத்தை பெறலாம் என […]
வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் இந்திய குடிமக்களின் ஆவணங்களை சரிபார்த்து சான்றளிப்பதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் இ-சனத் என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை அலுவலகத் தலைவர்; இந்தத்தளத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி விளக்கினார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு இணையவழியில், முகமற்ற, பணமில்லா மற்றும் காகிதமில்லா ஆவண […]
நாமக்கல் சேலத்தில் டிச.13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், வழியெங்கும் அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடங்களுக்கு […]
தேர்தல் ஆணையம் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 29ஏ-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன் படி மேற்கொள்ளப்பட்ட […]

