அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் மதுரை மத்திய & தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி; “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் மருமகன் சபரீசனும், துணை […]

மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; இன்று சுபமுகூர்த்த நாள், நாளை மீலாது நபி, செப்.6,7 வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 1,115 […]

ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா […]

தலைநகர் டெல்லி காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் இருப்பது சுகாதாரத்தை அச்சுறுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காற்றில பரவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளால் நுரையீரல் வாய் மற்றும் தோலில் தொற்றுநோய் ஏற்படுவதாக போஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அட்மாஸ்பெரிக் என்விரான்மென்ட் : X என்ற சர்வதேச இதழில், இதற்கான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது நகர்ப்புற சுகாதாரத் திட்டமிடலுக்கு விழிப்புணர்வாக […]

டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் ஐயா வைகுண்டர் குறித்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கலியுகத்தை அழித்து உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதார மெடுத்த ஐயா வைகுண்டரை பற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஆங்கிலக் கேள்வியில், ‘God of hair cutting’ என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தென்தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படுபவரும், தெய்வீக நிலையை அடைந்தவருமான […]

தமிழ்நாட்டில் முதல் முறையாக அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு பொதுமக்கள் சுயசான்றிதழ் முறையில் வீடுகட்டும் கட்டட அனுமதியை இணையதளம் வாயிலாக ஒற்றைச்சாளர முறையில் உடனடியாக ஒப்புதல் பெறும் திட்டம் தற்போது தூண்தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) வரையுள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இது குறித்து பத்திரப் பதிவுத்துறை வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்: […]

தமிழக அரசின் இலக்கியத் திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விதமான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு […]

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடை பணியாளர் […]

சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, சிறப்பாக பங்காற்றும் வகையில் செயல் புரிந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24-ம் தேதி) மாநில அரசின் சார்பில், சிறந்த பெண் […]

தமிழகத்தில் 6-ம் தேதி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா பகுதிகளை நாளை கடந்து செல்லக்கூடும். இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தின் ஒருசில இடங்களிலும், […]