தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு நடத்துவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. விவசாயிகளிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல், கொள்முதல் செய்த பாலை, […]
பத்திரப்பதிவு எங்கு நடந்தாலும் அமைச்சருக்கு 10 % கமிஷன் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழலை தோண்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று மதுரை ஒத்தக்கடையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: அதிமுக ஆட்சியில் தான் அதிக போராட்டங்கள் நடைபெற்றது. அதற்கு அனுமதி வழங்கினோம். போராட்டங்களை சந்திக்கும் தில், […]
தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60% நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் “பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.. மசாலா பொருட்கள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், அரிசி […]
ரயில்வே ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு சலுகைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் ரயில்வே மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கையெழுத்தானது. உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றான இந்தியன் ரயில்வே மற்றும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகிய இந்தியாவின் இரண்டு முன்னணி நிறுவனங்களிடையே இன்று ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் […]
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 13 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்–1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுங்சாலை, சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற உள்ளது. மாதவரம் மண்டலம் (மண்டலம்–3), வார்டு-32ல் சூரப்பட்டு, சண்முகபுரத்தில் உள்ள சமூதாய நலக்கூடம். தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்–4), வார்டு-44ல் பெரம்பூர், துளசிங்கம் தெருவில் […]
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் புதிதாக 15 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேவைக்கேற்ப, […]
தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு […]
அதிமுக வாக்குச்சாவடி கிளை நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தலில், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்வகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், வாக்குச்சாவடி (பாகம்) கிளைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாகிகள் […]
ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு..? என பாஜக மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் […]
தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]

