அமெரிக்காவின் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஒரு பெரிய பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல்-உதெய்தை ஈரான் குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்கா ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு ஈரான் இந்த நடவடிக்கையை […]

உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெருங்கனவு. அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் இன்று. ஏன் சர்வதேச ஒலிம்பிக் தினம் என கொண்டாடப்படுகிறது? ஒலிம்பிக் விளையாட்டின் ஐடியாவை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நாள் காலண்டரில் மார்க் செய்யப்பட்டுள்ளது. கடந்த […]

ஏமனில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஏமனின் தெற்கு மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், அவசரத் தலையீடு இல்லாவிட்டால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்றும் 3 ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் […]

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள டுவைலா பகுதியில் மார் எலியாஸ் தேவாலயம் அமைந்துள்ளந்து. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். அப்போது, திடீரென, தேவாலயத்திற்குள் உடலில் வெடிகுண்டுகளுடன் நுழைந்த தற்கொலை படையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இதில், குழந்தைகள் உட்பட 25 […]

ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்று அதிபர் டிரம்ப் சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். இந்த […]

மழை, வெள்ளம் வந்தாலும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தொடரும் என்றும் நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு புதிய சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இணையுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக (NFSU) வளாகம் மற்றும் மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மழைக்காலத்தின் ஒவ்வொரு முறையும், […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நமது பெரும்பாலான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தரவுகள் ஆன்லைனில் சேமிக்கப்படுகின்றன. வங்கி முதல் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் முதல் ஷாப்பிங் கணக்குகள் வரை அனைத்தையும் அணுக கடவுச்சொற்களை(Password) பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த கடவுச்சொற்கள் கசிந்தால், அது ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஹேக்கர்கள் இந்த கடவுச்சொற்களை பல புத்திசாலித்தனமான வழிகளில் திருடி, பின்னர் அவற்றை தவறாகப் பயன்படுத்துகின்றனர். கடவுச்சொற்கள் எவ்வாறு கசிந்து விடுகின்றன, ஹேக்கர்கள் உங்களை […]

தினமும் காலையில் கருப்பு மிளகு மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம், பல உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். அதன் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் தேன் மற்றும் கருப்பு மிளகு இரண்டும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை ஒன்றாக உட்கொண்டால், அவை பல கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். இந்த வீட்டு வைத்தியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை […]

நடிகர் சூர்யா பட புரமோஷன் நிகழ்ச்சியில் பழங்குடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல் அறிவில்லாமல் இருக்கின்றனர் என கடுமையாக விமர்சனம் […]

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா விஞ்ஞானிகள் மிகச் சிறிய, கொசு அளவிலான ட்ரோன்களை ராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக South China Morning Post (SCMP) செய்தி நிறுவனத்தின்படி, இந்த மிகச்சிறிய கொசு அளவிலான ட்ரோன் (micro drone) சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு (National University of Defence Technology – NUDT) உட்பட்ட ஒரு […]