வீடு தோறும் சமையல் அறையில் இருக்கும் முக்கியமான பொருள் வெங்காயம். வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வெங்காயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அந்த வெங்காயத்தில் இருக்கும் சின்னச் சின்ன குறைகள் நம் ஆரோக்கியத்திற்கே வேட்டுவைத்து விடும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெங்காயத்தில் காணப்படும் கருப்புப் புள்ளி மற்றும் கருப்பு கோடுகளால் நமக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். வெங்காயத்தை உரித்து நறுக்கும்போது […]

நன்றியில்லாதவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பை சாடிய எலோன் மஸ்க், “எனது உதவி இல்லையென்றால் 2024 தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், தற்போது கடுமையான பொதுவெளி சண்டையாக மாறியுள்ளது. இதன் மையக் காரணமாக, டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ள “One Big Beautiful Bill” என்ற வரி […]

BIS சான்றிதழ் இல்லாமல் 11,000க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட காமர்ஸ் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைன்ட்ரா(Myntra), மீஷோ(Meesho), பிக்பாஸ்கெட் (Bigbasket) நிறுவனங்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளுக்குப் பிறகு, இந்திய தரநிலைகள் பணியகம் அல்லது பிஐஎஸ் இந்த தளங்களில் சான்றிதழ் பெறாத பொருட்கள் விற்கப்படுவதைக் […]

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், ராம தர்பார் (Ram Darbar) உருவங்களின் முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஜூன் 5 அன்று, கங்கா தசமி பண்டிகையை முன்னிட்டு, கோயிலின் முதல் மாடியில் உள்ள ராம தர்பார் மற்றும் ஏழு பிற கோயில்களில் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்மபூமி புண்ணிய ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்ட […]

இந்திய அரசால் தமிழ் மொழியை செம்மொழியாய் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 19ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இந்த நிலையில்தான் ’தமிழை’ செம்மொழியாக கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மொழியின் பழமை, கிளைமொழிகளின் தாய்மொழி, பிறமொழிகளை சாராது, இலக்கிய இலக்கண வளம் உள்ளிட்ட 11 கோட்பாடுகள் செம்மொழிக்கான தகுதிகளாக […]

சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழும் வராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறார். வாழ்வின் பஞ்சங்களைப் போக்கும் வாராஹி அம்மனை சரியான முறையில் விரதமிருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் வளங்களை அருளும் சுக்கிரனுடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில், வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளன்று செய்வது நல்லது. சுக்கிரனுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி தாயாருக்கு உகந்த […]

இந்தியாவில் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், வாழும் உரிமை, குடும்ப வாழ்வு, குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமைகள் LGBTQ+ தம்பதிகளுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA+ தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததை நீதிபதிகள் GR சுவாமிநியாதன் மற்றும் V லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. இருப்பினும், திருமணம் என்பது ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி […]

என்ன செய்தால் நம்முடைய வீட்டில் விரைய செலவை தடுக்கலாம் என்ன செய்தால் நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்துவதால் தடைகளை ஏற்படுத்தும் எனவே எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம். பழைய சைக்கிள்கள், பழைய டிவி ரேடியோ, […]

பலர் உட்கார்ந்து வேலை செய்யும்போது, படிக்கும்போது அல்லது டிவி பார்க்கும்போது தங்களது கால்களை ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படி கால்களை ஆட்டுவதைப் பார்த்தால் திட்டுவார்கள். உண்மையில், உட்காந்திருக்கும்போது கால்களை ஆட்டுவது ஒரு கெட்ட பழக்கமாக கருதப்படுகிறது. கால்களை ஆட்டுவது ஒரு சாதாரண பழக்கமாக இருக்கலாம். ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா..? உண்மையில், நம்முடைய உடலானது ஒரு எப்போதும் செயல்பாட்டில் […]

தூய்மையான குடிநீர் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளிற்கும் மிகவும் அவசியமானது. இதனால் பலரும் வீட்டிலேயே RO (Reverse Osmosis) அமைத்து நீரை சுத்தம் செய்து குடிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சுத்தம் செய்யப்பட்ட கேன் தண்ணீர்களை தான் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் வசதி இல்லாதவர்கள் சுத்தமான நீரை குடிக்க என்ன வழி? RO அமைப்பு இல்லாமல், தண்ணீரை சுத்தமாக்குவது எப்படி என்று நினைக்கலாம். இயற்கையான மற்றும் அழுத்தமான நவீன […]