அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அறிவித்துள்ள நிலையில், முதலில் நீங்கள் நிறுத்துங்கள், பின்னர் போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம் என்று ஈரான் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ஈரான் அல்லது இஸ்ரேலிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். திலீப் தோஷி நேற்று (திங்கள்) லண்டனில் காலமானார். அவருக்கு வயது 77. பல தசாப்தங்களாக லண்டனில் வசித்து வந்த திலீப் தோஷி, மாரடைப்பால் இறந்தார். அவரது மரணச் செய்தி கிரிக்கெட் […]
பேரீச்சம்பழம் அல்லது கஜூர் என்று பிரபலமாக அழைக்கப்படும் பேரீச்சம்பழம், உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், செரிமானம், இருதய ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு கூட சிறந்தது. மருத்துவர்கள் தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட அறிவுறுத்தினாலும், அதனுடன் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. நீங்கள் பேரீச்சம்பழத்தை விதை அகற்றிய பின்பு அதன் உள்ளே உள்ளதை […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில், ரிஷப் பந்த் வரலாற்றில் தனது பெயரை பொறித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபூர்வமான சாதனையை அவர் நிகழ்த்தினார் . அதாவது போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து, செம்மையான படைப்பு மூலம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். சிவப்பு பந்து (red-ball cricket) போட்டிகளில் இது அவரின் மிக முக்கியமான சாதனைகளில் […]
கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவ தளம் மீதான ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் டொனால்டு […]
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் […]
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஒரு பெரிய பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேற்று கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல்-உதெய்தை ஈரான் குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்கா ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு ஈரான் இந்த நடவடிக்கையை […]
உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெருங்கனவு. அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் இன்று. ஏன் சர்வதேச ஒலிம்பிக் தினம் என கொண்டாடப்படுகிறது? ஒலிம்பிக் விளையாட்டின் ஐடியாவை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நாள் காலண்டரில் மார்க் செய்யப்பட்டுள்ளது. கடந்த […]
ஏமனில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஏமனின் தெற்கு மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், அவசரத் தலையீடு இல்லாவிட்டால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்றும் 3 ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் […]
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள டுவைலா பகுதியில் மார் எலியாஸ் தேவாலயம் அமைந்துள்ளந்து. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தனர். அப்போது, திடீரென, தேவாலயத்திற்குள் உடலில் வெடிகுண்டுகளுடன் நுழைந்த தற்கொலை படையை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இதில், குழந்தைகள் உட்பட 25 […]

