ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ள பிளாக் டீ பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அத்தகைய நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். ஏனெனில் பிளாக் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. எனவே க்ரீன் டீயைப் போலவே பிளாக் டீயும் நமக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பிளாக் டீ பாலுடன் சேர்த்து பருகாமல் இதை வெறும் தண்ணீருடன் […]

கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அருளின் இருப்பு என்பது வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆழ்ந்த அனுபவம். இந்த இருப்பை உணர்வது ஒரு சிலருக்கு இறை தரிசனத்தின்போது நிகழலாம். வேறு சிலருக்கு குரு தரிசனத்தின்போதும் நிகழலாம். அந்த தரிசன கணத்தின் உணர்வு என்பது காரண அறிவிற்கு அப்பாற்பட்டது. தன்னை மீறிய ஒன்று தனக்குள் நிகழ்வதை […]

தூத்துக்குடியில், குளோபல் உலக சாதனைக்காக ஒழுக்கம் குறித்த திருக்குறளைக் கூறியபடி தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே ஒழுக்கம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி வேலவன் வித்தியாலயா பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் […]

விழுப்புரத்தில் காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் கல்லூரி மாணவர்கள் இருவர் ஆடு திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்ரேணுகா. இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். திடீரென நேற்று ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இரு இளைஞர்கள் ஆடு ஒன்றினை தூக்கி கொண்டு இருசக்கரவாகனத்தில் சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகா, […]

இந்தியாவில் 16 பெண்களில் ஒருவருக்கும், 25 ஆண்களில் ஒருவருக்கும் உடல் பருமன் பிரச்சனை இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது . இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தேசிய குடும்ப நல ஆய்வில், ஒரு நபரின் உடல் நிறை குறியீட்டெண் ((BMI) அடிப்படையில் தான். அதாவது ஒரு நபர் 30க்கு மேல் BMI என்று சொல்லப்படக்கூடிய உடல் நிறை குறியீட்டெண் பெற்றிருந்தால், அவர் உடல் பருமனான நபராக கருதப்படுவார். இந்த விஷயத்தில் பிராந்திய வேறுபாடுகளும் BMI […]

அயர்லாந்தில் 30 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது உடல் எடையை குறைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, பீட்சா உலக உணவாக அவதாரம் எடுத்தது. ஆரம்பகாலத்தில் தட்டையான ரொட்டிகளில் காய்கறிகள் மற்றும் […]

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 9 வயது சிறுவன், தான் சேகரித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை நன்கொடையாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் […]

பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில், நண்பன் பட பாணியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் அழைப்பு மூலம் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவர்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முகாஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மாண்டியன், கேரனைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வலியால் அவதிபட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அப் பெண் அழைத்து செல்லப்பட்டார். […]

ஜம்மு காஷ்மீரில் பனிக்கட்டிகளின் மீது வெறும் காலில் நின்றபடி இளம் பெண்கள் தற்காப்பு கலை பயிற்சிகள் செய்து அசத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குளிர்காலம் தொடங்கி விட்டாலே குளிர்ச்சியான சூழ்நிலையை சமாளிப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்வார்கள். நம் நாட்டில் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவே உடலை நடுங்க வைத்துவிடும். மேலும் காஷ்மீரின் சில இடங்களில் பனி போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளிக்கும். குளிர்ச்சி குடிகொண்டிருக்கும் […]

2.8 மணிநேரம் செலவிடும் ஆண்களுடன் ஒப்பிடும்போது, 7.2 மணிநேரம் சம்பளம் இல்லாமல் பெண்கள் வீட்டு வேலை செய்கிறார்கள் என்று IIMA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது இதுதொடர்பாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) நேர பயன்பாட்டுக் கணக்கெடுப்பின் (TUS) அடிப்படையிலான ஆராய்ச்சியில், துப்புரவு, சமைத்தல், குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற அடிப்படை வீட்டுத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதை விட, ஊதியம் பெறும் பெண்கள் ஊதியமில்லாத வீட்டு வேலைகளில் இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுகிறார்கள் […]