நாடு முழுவதையும் உலுக்கிய ஒரு பெரிய மோசடியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. தோலேராவில் முதலீடு என்ற பெயரில் ரூ.2,700 கோடி மோசடி செய்த கும்பல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜுகல் கிஷோர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத்தில் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சமீபத்திய திட்டங்களில் ஒன்றாகும். இந்தநிலையில், குஜராத்தின் தோலேராவில் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக வாக்குறுதி அளித்து, […]

குஜராத்தில் பானிப்பூரி மீதான மோகத்தால், பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் பானிப்பூரி மீதான மோகம் அனைவருக்கும் தெரியும். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி பானிப்பூரி மீது கொண்ட அதீத விருப்பமுள்ள ஒரு பெண், 2 பானிப்பூரி கம்மியா கொடுத்ததை காரணம் காட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். அதாவது குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் […]

ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து […]

பெருமாள் மாதமாக கொண்டாடப்படும் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 20 இன்று வருகிறது. 2025 புரட்டாசி முதல் சனிக்கிழமை என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். புரட்டாசி மாதம் என்றாலே, புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, படையல், என்று ஒவ்வொரு சனிக்கிழமையும் களைகட்டும். இன்று, செப்டம்பர் 20, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில், முதல் சனி, இரட்டிப்புப் பலன்களைத் தரும். இந்த நாளில் என்ன செய்யலாம் என்று […]

மகாளய அமாவாசையின் சிறப்பு என்னவென்றால், மாதாந்தோறும் அமாவாசை திதி கொடுத்தாலும் இந்த மகாளய அமாவாசை திதி கொடுப்பது காசி, ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பது போன்று ஆகும்.அமாவாசை நாளில் இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள். அதாவது திதி கொடுக்கப்படாத முன்னோர்களுக்கு வழக்கமாக காசி ராமேஸ்வரத்தில் சென்று தான் திதி கொடுப்பார்கள் . ஆனால் அதனை இந்த மகாளய அமாவாசையில் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மகாளய அமாவாசையில் நூறு கோதானங்கள் […]

சூரிய கிரகணம் முக்கிய வானியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சந்திரன் வரும் ஒரு வானியல் நிகழ்வாகும்.வானியல் நிகழ்வு ஒரு காட்சி மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளில் கலாச்சார, அறிவியல் மற்றும் வானியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (செப்.21) அன்று […]

ஆசிய கோப்பை 2025 இன் 12வது போட்டியில் ஓமனை வீழ்த்தி இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. குரூப் கட்டத்தின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில், இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், அர்ஷ்தீப் சிங் T20I இல் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் ஆனார். ஓமனுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி […]

Mercedes-Benz Hurun India Wealth அறிக்கையின்படி, 2021 முதல் இந்தியாவின் செல்வம் வாய்ந்த குடும்பங்கள் வேகமாகப் பெருகி, 8,71,700 ஆக இரட்டிப்பு அளவில் வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ₹8.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட குடும்பங்கள் தற்போது மொத்த குடும்பங்களின் 0.31% ஆக உள்ளன. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 0.17% இருந்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை […]

க்ரோக்ஸ் காலணிகள் குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில் பிரபலமான ஃபேஷனாக மாறிவிட்டன. Crocs மிகவும் வசதியானவை, லைட்ட்வெய்ட்டானவை, மற்றும் நீர்ப்புகாமையாக இருக்கின்றன. அதனால் பனி அல்லது மழை காலத்திலும் குழந்தைகள் எளிதாக அணிய முடிகிறது. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் கால்களுக்கு Crocs காலணிகள் நல்லதா கெட்டதா என்ற கேள்வி எழுகிறது. அதாவது, இந்த வகை காலணிகளை தொடர்ந்து அணிவதால், முதுகுதண்டு பிரச்சனை, மூட்டுகளில் அழுத்தம், நடையில் பிரச்சனை ஏற்படும் […]

ரஷ்யாவின் கம்சட்கா தீவுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பயங்கர நிலநடுக்கத்தின் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன, இதில் தளபாடங்கள், கார்கள் மற்றும் விளக்குகள் கடுமையாக குலுங்குகின்றன. இதேபோல், ஒரு வாரத்திற்கு முன்பு, ரஷ்யாவை ஒரு வலுவான நிலநடுக்கம் தாக்கியது. கம்சட்கா பகுதிக்கு அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. […]