வீட்டில் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் அதிக அளவில் தங்கியிருக்கும் ஒரு இடம் என்றால், அது நிச்சயம் நமது கழிவறையாகத்தான் இருக்கும். சுகாதாரத்தின் முதல் படியாகக் கழிவறையைச் சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் அவசியம். ஆனால், மஞ்சள் கறைகள் படிந்து அசிங்கமாகத் தெரியும் கழிவறையைச் சுத்தம் செய்வது சவாலான வேலையாகப் பலருக்குத் தோன்றலாம். அதிக சிரமமின்றி, வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே, கிருமிகள் இல்லாத பளபளப்பான கழிவறையைப் பெறுவதற்கான எளிய வழிமுறையை […]

காலையில் சோம்பலை விரட்ட, மாலை நேரத்தில் புத்துணர்ச்சி பெற, ஏன்… சாதாரணமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்க கூட தேநீரை கையில் எடுக்கும் பழக்கம் இன்று பலருக்கும் நிரந்தரமாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் மது அருந்துபவர்களை விட டீக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. ஆனால், கட்டுப்பாடு இல்லாமல் தேநீர் அருந்துவது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும், குறிப்பாக டீ குடிக்கும் நேரத்தைச் சுற்றியுள்ள நீர் அருந்தும் பழக்கம் குறித்துப் பலருக்கும் குழப்பம் நிலவுவதாகவும் […]

உடற்பயிற்சிகளில் மிக எளிமையானதும், எந்த உபகரணங்களும் தேவைப்படாததுமான ஒரு முதலீடு எதுவென்றால், அது நடைப்பயிற்சிதான். கண்ணை மூடி கண் விழிக்கும் நேரத்தை மட்டும் முதலீடு செய்தால் போதும். மனநலன் தொடங்கி இதய நலன் வரை அத்தனை நன்மைகளையும் அள்ளித் தரும் அருமருந்தாக இது செயல்படும். நடைப்பயிற்சியை ஒரு கலை போலப் பார்க்க வேண்டும். வயதுக்கு ஏற்றவாறு சீரான கால அளவுடன் அதை மேற்கொள்வது நீண்ட கால ஆரோக்கியத்துக்கு மிகவும் அத்தியாவசியம் […]

இந்திய நிதி அமைப்பில் வெளிப்படைத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு, மற்றும் அமைப்புரீதியான பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய ரிசர்வ் வங்கி தனது மிகப்பெரிய சீர்திருத்த முன்மொழிவுகளில் ஒன்றான வரைவு 238-ஐ வெளியிட்டுள்ளது. கடன் வழங்குதல், EMI விதிமுறைகள், கிரெடிட் கார்டு விதிமுறைகள் மற்றும் வங்கி சேமிப்பு நடைமுறைகள் எனப் பல முக்கிய அம்சங்களில் இது மாற்றங்களை கொண்டுவர உள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கும் புதிய விதிகள் : பொதுமக்கள் கருத்துகளுக்காக நவம்பர் 10ஆம் […]

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள முதலூர் எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (36). கட்டிடத் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன்னுடன் சித்தாள் வேலை செய்து வந்த கௌதமி (28) என்ற பெண்ணுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொளத்தூர், திருவள்ளுவர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். […]

மோந்தா (Montha) புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எந்தவிதமான விடுமுறை அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால், பள்ளிக்குச் செல்ல […]

தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வியாண்டில், 311 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வரும் நிலையிலும், இத்தனை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாத இந்தப் பள்ளிகளில் மொத்தம் 432 ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு ஊக்குவிப்புத் […]

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று முன்தினம் கோட்டையூர் பரிசல் துறையின் காவிரி ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் மிதந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான […]

ரயில் பயணத்தின்போது கவனக்குறைவால் செல்போன், பர்ஸ் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான பொருள்கள் கீழே விழுந்துவிட்டால், பதற்றப்படாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக வெளியிட்டுள்ளது. கம்ப எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள் (Pole Number): உங்கள் பொருள் எந்த இடத்தில் கீழே விழுந்ததோ, அந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுவப்பட்டிருக்கும் மின்சார கம்பம் அல்லது கிலோமீட்டர் கல்லில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ள எண் […]

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு விதியை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும், அதாவது பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களிலும், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System – ABS) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் […]