திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ளது திருவெள்ளறை பெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் நான்காவது திருத்தலமாகப் போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணிபுரிந்த சுரேஷ் (54) என்பவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இக்கோயிலுக்குச் சொந்தமான நந்தவனத்தில், சுரேஷ் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இணையத்திலும், பக்தர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில், இந்த சம்பவம் […]

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதில் மக்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக, தரமான மற்றும் மலிவு விலை வெடிகளை வாங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பலர் சிவகாசியை நோக்கிப் படையெடுப்பது வழக்கம். ஆனால், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அந்த சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், அரசு கூட்டுறவு பண்டகச் சாலையிலேயே சிவகாசியில் தயாரிக்கப்படும் தரமான பட்டாசுகள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, […]

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீண்டும் […]

சென்னை திருவான்மியூரில் கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர் கௌதம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர் ஒருவர், அடையாறில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான குணசேகரன் ஆவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் […]

கடந்த வார இறுதியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இஸ்லாமாபாத்திற்கும் காபூலுக்கும் இடையில் தற்போது எந்தவிதமான உறவும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை, இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளை மிகவும் மோசமாக்கியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஆசிஃப், “தற்போதுள்ள நிலைமை ஒரு இறுக்கமான தேக்கநிலை தான். நேரடிப் பகைமை இல்லை. ஆனால், சூழல் […]

இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்படும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), இப்போது தூய்மைப் பணியிலும் ஒரு புரட்சிகரமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் காணப்படும் பொதுக் கழிவறைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். வாகன ஓட்டிகள், பயணிகளை நேரடியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தும் ஒரு புதுமையான திட்டத்தை NHAI அறிவித்துள்ளது. அதாவது, சுகாதாரமற்ற கழிவறைகள் குறித்துப் புகார் அளிக்கும் […]

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து (27) மற்றும் அவரது மனைவி சினேகா (24) ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக திருமண வாழ்வில் உள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்காக இவர்கள் தற்போது காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள 3-வது மைல் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காளப்பநாயக்கன்பட்டி அருகே புளியங்காடு பகுதியில் வசித்து வந்த […]

இந்திய உணவுப் பழக்கவழக்கங்களில் முக்கிய இடம்பிடித்திருக்கும் தயிர், சுவைக்காக மட்டுமின்றி ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பெரிதும் பாராட்டப்படுகிறது. புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக விளங்கும் தயிர், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்தி செரிமான ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகின்றன. பலவீனம் மற்றும் சோர்வுடன் போராடுபவர்கள் தினசரி உணவில் தயிரைச் சேர்ப்பது புத்துணர்ச்சி அளிக்கும். தயிர் சாப்பிட சிறந்த நேரம் : சுகாதார […]

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், ஒரு பள்ளி ஆசிரியைக்கும் அதே பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ள உறவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அந்த ஆசிரியை, பள்ளியில் இருந்து விலக்கப்பட்ட ஒரு முன்னாள் மாணவருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், அந்த […]

நம் வீட்டு சமையலில் நீக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் முருங்கைக்காய், சுவைக்காக மட்டுமல்ல, ஆரோக்கிய பலன்களுக்காகவும் போற்றப்படுகிறது. சாம்பார், கறி, பொரியல் என எந்த உணவு வகையின் தரத்தையும் மேம்படுத்தும் இந்த காய்கறியில், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், இரும்பு, வைட்டமின் A மற்றும் C போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கைக்காயின் பலன் அதோடு நிற்பதில்லை. இதன் இலைகள், பூக்கள், விதைகள், பட்டை என ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் […]