சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று முன்தினம் கோட்டையூர் பரிசல் துறையின் காவிரி ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் மிதந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான […]

ரயில் பயணத்தின்போது கவனக்குறைவால் செல்போன், பர்ஸ் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான பொருள்கள் கீழே விழுந்துவிட்டால், பதற்றப்படாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக வெளியிட்டுள்ளது. கம்ப எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள் (Pole Number): உங்கள் பொருள் எந்த இடத்தில் கீழே விழுந்ததோ, அந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுவப்பட்டிருக்கும் மின்சார கம்பம் அல்லது கிலோமீட்டர் கல்லில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ள எண் […]

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு விதியை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும், அதாவது பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களிலும், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System – ABS) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் […]

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கொறுக்கையில் அமைந்திருக்கிறது அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் மற்றொரு புராணப் பெயர் திருக்குறுக்கை. ஹோலிப் பண்டிகைக்குக் காரணமாக இருந்த ‘காம தகனம்’ (மன்மதனை எரித்தது) நிகழ்ந்த இடமாக இத்தலம் பார்க்கப்படுகிறது. இக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் மணலுக்குப் பதில் தோண்ட, தோண்ட சாம்பல் கிடைப்பது இன்றும் பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தலத்தின் மூலவர் வீரட்டேஸ்வரர், தாயார் ஞானாம்பிகை, உற்சவர் யோகேஸ்வரர் ஆவர். மன்மதனை எரித்த […]

இந்த உலகம் நம்பிக்கை மற்றும் நாத்திகம் என்ற இரண்டு துருவங்களில் இயங்குகிறது. இறைவன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் நடந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி நம்மை விடவும், நாம் நினைப்பதை விடவும் பிரபஞ்சத்தில் இயங்குகிறது என நம்புபவர்களே அதிகம். இந்த நம்பிக்கையின் முக்கிய அங்கம் தான் ‘சாமி ஆடுதல்’ மற்றும் ‘அருள்வாக்கு’ கூறுவது. இறைநம்பிக்கை அற்றவர்கள் இதை மோசடி என்றும், ஆதாயத்துக்காக ஏமாற்றுவதாகவும் விமர்சிப்பதுண்டு. இந்தச் சூழலில், […]

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், வாடா தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, அவருக்கு அறிமுகமான நபர் ஒருவர் ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு, அந்தப் பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில், அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், அப்பெண்ணின் கணவர்தான் அழைப்பதாக கூறி, ஊருக்கு […]

கோவையில் காவலர் பல பெண்களுடன் தகாத உறவில் இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஆறுமுகம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த சந்தியா தேவி தனது கணவரிடம் இதுகுறித்து வினவியபோது, அவர் அவர்களை எல்லாம் […]

பெங்களூரு கெங்கேரி அருகே உல்லால் உபநகர் பகுதியில் வசித்து வரும் சீனிவாஸ் சுவாமி என்பவர், தன்னை ஒரு மந்திரவாதி என்று கூறிக்கொண்டு, பேய் பிடித்தவர்களை விடுவிப்பதாக சொல்லிவந்தார். இவரை நம்பிப் பலரும் இவரது வீட்டிற்கு வந்து சென்றதால், இவர் அடிக்கடி இரவில் பூஜை என்ற பெயரில் சத்தமாக மந்திரங்களை ஓதுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவில் சீனிவாஸ் சுவாமி, ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு ‘ஹ்ரீம்.. ஹ்ரீம்.. ஹ்ரூம்.. பட்.. பட்…’ போன்ற […]

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நெரிசல் ஏற்பட்டபோது விஜய் சம்பவ இடத்தில் இல்லாமல் சென்னை திரும்பியது குறித்து அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்தத் துயரச் சம்பவம் நடந்து ஒரு மாதமாகும் […]

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் நேற்று தொழிலாளி ஒருவரை மறித்துத் தாக்கி, செல்போனை பறித்துச் சென்ற 3 கல்லூரி மாணவர்கள் குறித்த வழக்கில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அம்மாப்பேட்டை அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த அந்தக் கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். […]