உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் அமேசான், தற்போது சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி, ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செலவுகளைக் குறைக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் பணிநீக்க நடவடிக்கை இன்று முதல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவைகளை வழங்கி வரும் […]

வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான ஆதித்ய தாக்கரே ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், இந்தப் பிழைகளை தேர்தல் ஆணையம் சரி செய்ய தவறினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிப்பதா வேண்டாமா என்று எதிர்க்கட்சிகள் இணைந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும் என உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார். “மும்பையை விழுங்க வரும் அனகோண்டா”..!! யாரையும் நேரடியாக குறிப்பிடாமல், […]

கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) மற்றும் பி.யூ.சி. (PUC) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மாநில அரசு மாணவர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது, இந்த சதவீதம் 33% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்ச்சி விதிமுறைகள் என்ன..? இந்தக் குறைக்கப்பட்ட சதவீதத்தின்படி, இனி […]

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வங்கக் கடலில் உருவான ‘மோந்தா’ புயலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, இன்று (அக்.28) சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக வதந்தி பரவியதாகவும், பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

மேற்கு துருக்கியில் நேற்றிரவு 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏற்கனவே சேதமடைந்திருந்த குறைந்தது 3 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலகேசிர் (Balikesir) மாகாணத்தில் உள்ள சிந்தர்கி (Sindirgi) என்ற நகரத்தில் சுமார் 5.99 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா அளித்த தகவலின்படி, சிந்தர்கியில் மக்கள் வசிக்காத 3 கட்டிடங்களும் ஒரு இரண்டு மாடிக் கடையும் […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பொன்நகர் அல்லி அர்ஜுனா நகரைச் சேர்ந்த 34 வயதான பழனியப்பன் என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நன்கு அறியப்பட்ட பழனியப்பன், பொறியியல் பட்டதாரி என்பதுடன், கட்டுமானத் தொழில் செய்து வந்தார். மேலும், இவர் பாஜக ஒன்றிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சம்பவத்தன்று, பழனியப்பன் பொன்நகர் பகுதியில் தான் ஈடுபட்டு வந்த கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இருசக்கர […]

உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்னஸுடனும் இருக்க, உடலின் நீர்ச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியம். ஆனால், உடற்பயிற்சிக் கூடங்களில் நாம் செய்யும் ஒரு பொதுவான தவறு, வொர்க் அவுட் செய்து முடித்த உடனேயே வேகமாகத் தண்ணீர் குடிப்பதுதான். உடற்பயிற்சிக்குப் பிறகு நமது உடல் தீவிரமான செயல்பாட்டிலிருந்து மீண்டு தன்னைச் சரிசெய்யும் பணியில் இருக்கும். அப்போது, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இயல்பாக அதிகமாக இருக்கும். ரத்த ஓட்டம் தசைகளுக்கு அதிக […]

உணவுப் பிரியர்கள் மத்தியில் ‘சில்லி பொட்டேட்டோ’ மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி. காரம், மொறுமொறுப்பு மற்றும் தனித்துவமான சுவை காரணமாக இது பலரின் விருப்பமான உணவாக உள்ளது. ஆனால், உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவராக நீங்கள் இருந்தால், இந்த சுவையான உணவு குறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில்லி பொட்டேட்டோ உணவில் சேர்க்கப்படும் மசாலாக்கள் அல்ல, மாறாக அதைத் தயாரிக்கும் முறையும், பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவும்தான் […]

இந்து மதத்தில் துளசி செடிக்கு ஒரு புனிதமான இடம் உண்டு. பெரும்பாலான வீடுகளில் துளசி செடியை வைத்து வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், துளசியில் உள்ள வகைகள், அவற்றின் சிறப்புப் பண்புகள் மற்றும் நடும் திசைகள் குறித்த சரியான புரிதல் பலருக்கு இருப்பதில்லை. துளசியில் முக்கியமாக ராம துளசி (வெள்ளை துளசி) மற்றும் கிருஷ்ண துளசி (கருந்துளசி அல்லது ஷ்யாமா துளசி) என இரண்டு வகைகள் உள்ளன. ராம துளசி […]

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். அவர், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) மீது அளித்த புகார், காவல்துறையினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரில், “சித்ரதுர்கா டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் கடிலிங்கப்பா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் எனக்குப் […]