கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமணமான பெண்ணுக்கு அவரது கணவரால் நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2024 ஆம் ஆண்டு சையத் இனமுல் ஹக் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது, வரதட்சணையாக 340 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகுதான், தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், தான் அவரது இரண்டாவது மனைவி என்றும் அந்தப் பெண்ணுக்குத் […]
சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று, அங்குப் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மிரட்டி கொள்ளையடித்த வழக்கில், தமிழ்நாட்டை சேர்ந்த இருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையையும், 12 பிரம்பு அடிகளையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27) ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணமாக சென்றுள்ளனர். 2 நாட்கள் கழித்து […]
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று வால்பாறைக்கு அருகில் உள்ள அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக கருமலை இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதனால் கருமலை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. […]
வீட்டு குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம், எரிவாயு சிலிண்டர் சீக்கிரம் தீர்ந்து போவதுதான். பண்டிகை காலமானாலும், அன்றாட சமையலாக இருந்தாலும் எதிர்பாராத இந்த அதிக எரிவாயு நுகர்வு பலருக்கும் தலைவலியாக இருக்கிறது. சிலிண்டர் குறைவாக நிரப்பப்பட்டிருக்கலாம் அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, சிலிண்டர் முன்கூட்டியே தீர்ந்து போவதற்கு நாமே அறியாமல் செய்யும் சில தவறுகளும், […]
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், ரயில் பாதையைக் கடந்து சென்றுகொண்டிருந்த 4 சிறுவர்கள் மீது அதிவேகமாக வந்த ஜோக்பானி – தானாப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (26301) ரயில் மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காஸ்பா மற்றும் பூர்ணியா ரயில் நிலையங்களுக்கு இடையே, வடகிழக்கு எல்லை ரயில்வே (NFR) பிரிவின் கீழ் நடந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையின்படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இந்த சிறுவர்கள், அருகிலுள்ள துர்கா பூஜை […]
வங்கி இயக்குநர்கள், பங்குதாரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் தங்களது உறவினர்களுக்குத் தாங்கள் பணிபுரியும் வங்கியில் அதிக அளவில் கடன் வழங்குவதாகவும், இந்தக் கடன்கள் பெரும்பாலும் வாராக்கடன்களாக மாறி மக்களின் பணத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அளவுக்கு விதிமுறைகளை மீறி வழங்கப்படும் இத்தகைய கடன்களால் வங்கிகள் மீட்க முடியாமல் திணறுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தற்போது புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த […]
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த செப்.27ஆம் தேதி விஜய் பிரசாரத்தின்போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாமக்கல் காவல்துறையினர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை தன்னை கைது செய்யலாம் என அஞ்சி, சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், […]
சுத்தம் என்றவுடன் பளிச்சென்ற தரை மற்றும் பளபளக்கும் கழிவறை மட்டுமே பலரது நினைவுக்கு வரும். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வீட்டுப் பொருட்கள், கழிவறை இருக்கையை விடவும் பல மடங்கு அதிக கிருமிகளின் கூடாரமாக இருக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமையலறை : நம் ஆரோக்கியம் தொடங்கும் இடமான சமையலறையிலேயே ஆபத்து ஒளிந்திருக்கிறது. பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்ச், கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற ஈரப்பதம் மற்றும் உணவுத் துகள்களை […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொசவபட்டி தனிஷ்கோடி காலனியில் மர வேலை செய்யும் செந்தமிழ்ச்செல்வன் என்பவர் தனது மனைவி சௌமியா மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வந்த ஸ்டாலின் என்பவருக்கும் செந்தமிழ்ச்செல்வனின் மனைவி சௌமியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை செந்தமிழ்ச்செல்வன் பலமுறை கண்டித்தும் அவர்கள் உறவை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, சௌமியா தனது செல்போனில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். இதை […]
இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருக்கும் ரூ.1 ரூபாய் நாணயம், இந்திய நாணய அமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும். எனினும், இதை உற்பத்தி செய்வதற்கான செலவு அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக உள்ளது என்ற தகவல் நிதி சார்ந்த சுவாரஸ்யமான சவாலை வெளிப்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் 2018 ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவலின்படி, ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க இந்திய […]

