அஸ்பெஸ்டாசிஸ் என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். நீண்ட காலமாக அஸ்பெஸ்டாஸ் இழைகளையும், தூசியையும் சுவாசிப்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இது ஒரு வகையான கனிமம் ஆகும். இது காற்றில் நுட்பமான மற்றும் நீண்ட காலம் நீடித்திருக்கும் இழைகளாக மாறும். இந்த இழைகள் நுரையீரலுக்குள் நுழையும்போது, அவை நுரையீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் தடிப்பையும், வடுவையும் உருவாக்குகின்றன. இது சுவாசிப்பதை மிகவும் கடினமாக்கி, நாளடைவில் உயிருக்கு ஆபத்தான சூழலை கூட உருவாக்கிவிடும். […]
காலை எழுந்ததும் காஃபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உண்டு. ஆனால், இந்த பானங்கள் சிலருக்கு வயிற்றின் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த மாற்றாக, சங்குப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ‘ப்ளூ டீ’ அல்லது ‘சங்குப்பூ தேநீர்’ உள்ளது. இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு தருகிறது. சங்குப்பூ தேநீரின் பயன்கள் : மன அழுத்தத்தைக் குறைக்கும் : […]
தமிழ்நாடு அரசு, கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறப்புப் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையும், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் செப்.8ஆம் தேதி இந்த முகாமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலம் மொத்தம் 180 கால்நடை […]
இந்த ஆண்டில் (2025) மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என முன்பே அறிவிக்கப்பட்டது. அதில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் அடங்கும். ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ்ந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இம்மாதத்தில் (செப்டம்பர்) நிகழ உள்ளது. அதாவது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம், செப்டம்பர் 21ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று […]
புரட்டாசி மாதம், பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த மாதத்தில், புதனின் அதிபதியான பெருமாளை வழிபடுவது நம் பாவங்களையும், துன்பங்களையும் நீக்கி நன்மைகளையும், புண்ணியத்தையும் தரும் என நம்பப்படுகிறது. இந்தாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதியன்று பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த புதன்கிழமை மற்றும் ஏகாதசி திதி ஆகிய மூன்று சிறப்பான தினங்கள் இணைந்து வருவதால், முதல் நாள் வழிபாடே கூடுதல் […]
நாம் எந்த கடவுளை வணங்கினாலும், முதலில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு என்பது நம் குடும்பத்தின் வேர்களை போற்றுவதாகும். அனைத்து தெய்வங்களின் ஆசியும் கிடைக்க வேண்டும் என்றால், குலதெய்வ வழிபாடு முக்கியமாகும். ஒருவரின் வாழ்வில் எந்தவொரு சுப காரியங்களை தொடங்கும் முன், குலதெய்வத்தை வணங்கிவிட்டு தொடங்கினால் அது வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. ஆனால், குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செய்வது என்ற தவறான எண்ணம் […]
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை காலை, ராஜபரி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ்வர் ரௌனியர் (26) என்பவரின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இது ஒரு விபத்து என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், நாகேஷ்வரின் உடலில் இருந்த காயங்கள் உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், நேஹா மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் சேர்ந்து, நாகேஷ்வரை கொலை செய்தது தெரியவந்தது. நேஹா, நாகேஷ்வருடன் வாழ விரும்பவில்லை என்றும், […]
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது காதலியை பார்க்கச் சென்றபோது, அவரது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 18 வயது மாணவன், மாணவி ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் மாணவியை அய்யனாவரத்தில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், செல்போன் […]
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பரவி வரும் சில புகைப்படங்கள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தில் மாதம்பட்டியும், ஜாய் கிரிஸில்டாவும் லிஃப்டில் நெருக்கமாக இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில், ரங்கராஜ் திருமணமானவர் என்பதை அறிந்தும் […]
ரத்த தானம் செய்வது ஒரு உன்னதமான செயல். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இது குறித்து மருத்துவர் அருண் கார்த்திக் என்ன சொல்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். ரத்த தானம் செய்வதற்கு முன் சில அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன ரத்த சோகை (Anemia) : ரத்த தானம் செய்பவருக்கு […]