தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. வலுவான கூட்டணிக் கட்டமைப்பை வைத்திருக்கும் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் வியூகம் வகுத்து வருகிறது. மற்றொருபுறம், யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துச் […]

தற்போது பலரும் குடிநீராகப் பயன்படுத்தும் மினரல் வாட்டரை (Mineral Water) சூடுபடுத்திக் குடிப்பது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இந்த நீர், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசியத் தாதுக்களைக் கொண்டிருப்பதால், அதனைச் சூடுபடுத்திக் குடிப்பதற்கு முன்னர் சில முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். மினரல் வாட்டரை சூடுபடுத்திக் குடிப்பதால் சில நன்மைகள் உள்ளன. ஆயுர்வேதத்தின்படி, வெதுவெதுப்பான நீரைப் பருகுவது செரிமானத்தைத் தூண்டுகிறது. குறிப்பாக வெறும் […]

தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தியின் முக்கிய மையமான நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்றுமதியின் தேவை அதிகரிப்பு மற்றும் உள்ளூர் உற்பத்தியின் குறைவு போன்ற காரணங்களால், கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள சுமார் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரி சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழ்நாடு […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் மாற்று கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட பலரும் இணைந்து வருகின்றனர். சமீபத்தில், அதிமுக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிகழ்வுக்குப் பிறகு, விஜய்யின் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் அரசியல் தலைவரான நல்லகண்ணு, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, […]

தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்குவது, பேருந்துகளில் இலவசப் பயணம் (இதன் மூலம் மாதத்திற்கு மேலும் ரூ.1,000 வரை சேமிக்க முடிகிறது) மற்றும் திருமண உதவித் திட்டங்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மின்சார ஆட்டோ வாங்க கடன் உதவி : […]

தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியின் கால்நடை மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்நடை அரசு மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிக அடிப்படையில், […]

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் அமைவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி பலருக்கும் தடை, தாமதம் அல்லது நல்ல வரன் அமையாமல் தட்டிப் போவது போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்குப் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தொடர்வதும் செவ்வாய், வியாழன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் ஜாதகத்தில் பலவீனமடைந்து தோஷம் ஏற்படுத்துவதும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. ஜாதகத்தில் கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்காமல் திருமணம் நடந்தாலும், கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், […]

2026 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்த ஆண்டு முழுவதும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் இருக்க புத்தாண்டு தினத்தன்று காலையில் சில சக்திவாய்ந்த மந்திரங்களை உச்சரித்து வழிபடுவது மிகவும் அவசியமாகிறது. இந்த மந்திரங்களின் தெய்வீக ஆற்றலும், நல்ல அதிர்வலைகளும் ஆண்டு முழுவதும் மனத்தெளிவு, அமைதி மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடியவை என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். புத்தாண்டு தினத்தை நலமுடன் துவங்க 15 மந்திரங்கள் : […]

சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் தாயார், தனது தோழி கற்பகத்திற்கு உதவுவதற்காக மகள் எஸ்தரை நகை எடுத்துச் செல்லும்படி அனுப்பியுள்ளார். கிழக்கு தாம்பரம் அருகே கற்பகத்தின் மகள் சந்தியாவை சந்தித்த எஸ்தர், இருவரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்து ரூ.30,000 பெற்றுள்ளனர். அதன் பிறகு, சந்தியா, எஸ்தரை இரும்புளியூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சந்தியாவின் தந்தை சங்கர், […]