fbpx

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். இவர், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர், …

பாகிஸ்தானில் சுரங்கத் தொழிலாளர்கள் சென்ற பேருந்து குண்டுவெடி விபத்தில் சிக்கியதில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் தனிநாடு கோரி போராடி வரும் மக்கள் நிறைந்த மாகாணமாக பலூசிஸ்தான் இருந்து வருகிறது. அங்கு, ஹர்ணி பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் பணியாற்றுவதற்காக, சுரங்கத் தொழிலாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அப்போது, பேருந்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. …

மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் என்.பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், முதல்வா் பதவியில் இருந்து பிரேன் சிங் திடீரென விலகினார். இதையடுத்து, புதிய முதல்வரை முடிவு செய்வதில் முடிவு எட்டப்படாமல் 4 நாட்களாக இழுபறி நீடித்து வந்த …

சமீப காலங்களாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கு சிறுமிக்கு ஆசிரியர் ஒருவர், பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் நோணாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆசிரியராக …

நெல்லையில் உதவியாளர் ஊசி போட்டதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். அவர் கூறுகையில், ”நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாததால், அங்கிருந்த உதவியாளர் ஊசிப் போட்டு 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தார். 4 ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் சுகாதாரத்துறை …

ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரான பவன் கல்யாண், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் சனாதன யாத்திரையை தொடங்கினால், நிச்சயம் அறிவித்துவிட்டுதான் செய்வேன்” என்று தெரிவித்தார்.

இதனைத் …

ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது.

நிறைய பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். …

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தேனை விரும்பி உண்டு. அந்த வகையில், தேன் என்பது பூக்களின் அமிர்தத்திலிருந்து தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான இனிப்புப் பொருள். தேனில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நமது உடலுக்கு பல்வேறு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பலர் தங்கள் சருமத்தை …

தலைவலியானது பல வகைகளாக இருந்தாலும், இதற்கான காரணங்களும் பல வகைகள்தான். மன அழுத்தம், உணர்ச்சி அதிகரித்தல், நீரிழப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல காரணங்களால் தலைவலி வருகிறது. தலைவலியின் அளவும் மிதமான, தீவிர, அதி தீவிர, பொறுத்துக்கொள்ளமுடியாத என பல அளவுகளில் வரும். இது சிலருக்கு எப்போதாவது வரலாம். சிலருக்கு அடிக்கடி, ஏன் …

வரி தொடர்பான விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் முக்கிய கவனம் PAN மற்றும் ஆதார் தொடர்பான விதிமுறைகளை எளிதாக்குவதாகும். இந்த மசோதா உங்கள் PAN மற்றும் ஆதாரை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி …