சென்னை மேடவாக்கம் விஜயநகர் பூங்கா தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (38). இவர், கூலி வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு மீனா (40) என்ற மனைவியும், 22 வயதில் ஒரு மகனும், 21 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சத்தியசீலன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி மீனாவை துன்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவருடன் மீனாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரின் கொடுமைகளால் […]

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா பாட்டியா, தனது அழகான மற்றும் ஆரோக்கியமான உடல் தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது உடற்பயிற்சி பயிற்சியாளரான சித்தார்த் சிங், எடை குறைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இந்திய வீடுகளில் பொதுவாக காணப்படும் சில உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும். எடை இழப்புக்கு தடையாக இருக்கும் அந்த 5 பிரபலமான உணவுகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம். […]

மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இந்தப் படம் 1991ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், விஜயகாந்தின் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு போன்ற முன்னணி நடிகர்களின் 100-வது திரைப்படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில், விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படம் வசூலை வாரிக் குவித்தது. மேலும், இந்தப் படத்தில்தான் மன்சூர் அலிகான் […]

தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின்படி, டெலிவரி வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. உணவு, பார்சல் போன்ற பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள், இந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மானியத்தைப் பெற, விண்ணப்பதாரர்கள் முதலில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஸ்விக்கி, சொமாட்டோ, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் […]

நாடு முழுவதும் வரவிருக்கும் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம், பல்வேறு பொருட்களின் விலையை குறைத்து நுகர்வோருக்கு பெரும் நிம்மதி அளிக்க உள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ‘வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி 2.0’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது..? டிராக்டர் : டிராக்டருக்கான ஜிஎஸ்டி வரி 12% இல் […]

தனது குழந்தைகளின் பள்ளி ஆசிரியையுடன் கள்ளத்தொடர்பு வைத்த தொழிலதிபர், கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ராகேஷ் வைஷ்ணவ், ஒரு தொழிலதிபர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் ஐஸ்கான் கோவில் அருகே தனியார் பள்ளியில் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 5 வயது மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக […]

தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தனது 3 வயது குழந்தையை பெற்ற தாய் கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் (33) மற்றும் அவரது மனைவி மம்தா (26) ஆகியோருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மம்தா தனது மகன் சரண் (4) மற்றும் மகள் தனுஸ்ரீ (3) ஆகியோருடன் சப்ஷாபள்ளி கிராமத்தில் உள்ள […]

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளது. மதுரை மாநாட்டை தொடர்ந்து, தனது முதல் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கினார். இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், அந்த நிபந்தனைகள் முறையாக […]

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, நம் அன்றாட வாழ்க்கையில் கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வரிசையில், உலகப் புகழ்பெற்ற மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், வீடியோ அழைப்பு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி நீங்கள் வீடியோ காலில் பேசும்போது, உங்கள் பின்னால் இருக்கும் சாதாரண பின்னணிக்கு பதிலாக, உங்கள் கற்பனைக்கு ஏற்றபடி ஒரு மாயாஜால உலகத்தை உருவாக்கலாம். இந்த புதிய வசதி, செயற்கை நுண்ணறிவு (AI) […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இது தங்கள் கட்சியின் வாக்குகளை பிரித்துவிடுமோ என்ற அச்சத்திலும் அரசியல் தலைவர்கள் இருந்து வருகின்றனர். விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 2026 சட்டமன்றத் […]