ஒவ்வொரு படத்திற்காகவும் தனது தோற்றத்தை மாற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்களில் நடிகர் மாதவன் முக்கியமானவர். இவர் சமீபத்தில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்திற்காக அதிகரித்த உடல் எடையை, அதிவேகமாக, எந்தவொரு தீவிரப் பயிற்சியோ அல்லது உணவுப் பிற்சேர்க்கைகளோ (Supplements) இல்லாமல் குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார். ‘ராக்கெட்ரி’ திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்திருந்த மாதவன், படப்பிடிப்பு முடிந்தவுடன் (2022-இல்) எடையைக் குறைக்கும் தேவை ஏற்பட்டது. இதுபற்றிப் பேசிய […]
தென்காசி மாவட்டம் ஊர்மேழகியான் கிராமத்தை சேர்ந்தவரும், செங்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞருமான முத்துக்குமாரசாமி (46), பகல் நேரத்தில் தனது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரசாமி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். போலீஸ் விசாரணையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்தச் […]
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி, மீண்டும் தங்கள் தாய் கழகமான அ.தி.மு.க-வில் இணைந்து வருவது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில், அ.ம.மு.க-வில் முக்கியப் பொறுப்பு வகித்த மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஆர். சுரேஷ் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுக-வின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் அவர் மீண்டும் கட்சியில் இணைந்தார். […]
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வேகத்தை பார்த்தால், அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே பயம் உண்டாகிறது. இந்நிலையில், உலகின் முன்னணி AI நிபுணர்களில் ஒருவரான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவரது கணிப்புப்படி, இனி வரும் காலங்களில் உலகெங்கிலும் சுமார் 80% வேலைவாய்ப்புகள் AI காரணமாக இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும், அதிக சம்பளம் பெறும், […]
தென்காசியை சேர்ந்த கண்ணன் (25) என்பவரும், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) என்பவரும் சொரிக்காம்பட்டி கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து விவாகரத்தான நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது. இதற்கிடையே, கண்ணனுக்கும் கலாசூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கலாசூர்யாவின் குழந்தை சிவானி தனக்குத் […]
சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, பிறப்பு பதிவு செய்யாதவர்கள், பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 27, 2026-ஆம் தேதியே கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதாக அந்த தகவல் பரவி வருகிறது. ஆனால், மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான பிஐபி உண்மை சரிபார்ப்புப் பிரிவு (PIB Fact Check) இந்தத் தகவல் குறித்துப் பொதுமக்களுக்கு […]
நீலகிரியை சேர்ந்தவர் பிரவீன் (22). இவர், கோவையில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், ஊட்டியில் தற்போது 10ஆம் வகுப்பு படிக்கும் 15 சிறுமியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இதற்கிடையே, இருவருக்கும் மத்தியில் அடிக்கடி சண்டைகள் வரத் தொடங்கின. இதனால், இருவரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் பிரவீனுக்கு, ஊட்டியில் படித்து வரும் கல்லூரி […]
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் கார்களில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த […]
உலகெங்கிலும் உள்ள முருகப் பெருமானின் ஆலயங்களில், அவருக்கு மிகவும் பிரியமானதாகவும், அவரது திருவடிகள் பட்டதாகவும் கருதப்படும் இரண்டு முக்கியத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வள்ளியைத் திருமணம் செய்த வள்ளிமலை, மற்றொன்று திருவிடைக்கழி ஆகும். இவற்றுள் திருவிடைக்கழி முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தலம் எனப் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சூரனை வதம் செய்ததால் வந்த தோஷம் : திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், சூரபத்மனின் மகனான இரணியாசுரன் […]
பொதுவாக, சிவன் கோயில்கள் அனைத்திலும் வருடத்தில் ஒரே ஒரு முறை, அதாவது ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் மட்டுமே சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த சிறப்புக்குரிய ஆலயம் தான் திருவாரூரில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் ஆகும். அமாவாசை அன்னாபிஷேகத்தின் சிறப்பு […]

