வீர, தீர செயல்களுக்கான தமிழக அரசு வழங்கும் விருது…! டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

Tn Govt 2025

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் உட்பட) இந்த பதக்கங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு கிடையாது.

2026-ம் ஆண்டுக்கான ‘வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். இந்த இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீர தீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 15-ம் தேதி ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். தகுதியுடையோர் அரசால் நியமிக்கப்படும் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வெள்ளிக்கிழமை முருகனை வழிபட்டால் வாழ்க்கை செழிக்கும்..!! இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் வழிபடுங்க..!!

Fri Nov 7 , 2025
பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் கிரகங்களில் சுக்கிரனுக்கும், செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமிக்கும் உரிய நாளாகக் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதும், விளக்கேற்றுவதும், கோ பூஜை செய்வதும் செல்வச் செழிப்பையும், மன நிம்மதியையும் தரும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இந்தச் சக்தி வாய்ந்த நாள், அன்பையும் அருளையும் ஒருங்கே கொடுக்கும் நாளாகும். பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி […]
Murugan 2025

You May Like