உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு… நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு…!

UGC case 11zon

உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்க்கரை, எண்ணெய் பொறித்த உணவு பொருட்கள் குறித்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தியாவில் உடல் பருமன் தீவிர பொது சுகாதார பிரச்சினையாக இருக்கிறது என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உடல் பருமன் பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைய தலைமுறையினர் உடல் பருமனை கையாள்வது ஆரோக்கியமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு முக்கியமானது.

பழங்கள், காய்கறி, குறைந்த அளவிலான புரதங்கள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடும்போது அது அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இளைஞர்களிடம் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்க, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சர்க்கரை, எண்ணெய் பொறித்த உணவு பொருட்கள் குறித்த தகவல்களை அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். அந்த பலகையில் அன்றாட உணவுகளில் மறைக்கப்பட்டுள்ள கொழுப்புகள், சர்க்கரைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் உணவுகளை கவனத்துடன் தேர்வு செய்வார்கள்.

இதை கல்வி நிறுவனங்களின் உணவகங்கள், கூட்ட அறைகள் போன்ற மாணவர்கள் பார்க்கும் வகையில் வைக்கவேண்டும். அதேபோல், உடல் பருமனை தடுக்க போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், உடற்பயிற்சி சார்ந்த பயிலரங்குகளை நடத்த வேண்டும். இதை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும்.

Vignesh

Next Post

மகாளய பட்சம்..!! இந்த நாட்களில் எக்காரணத்தை கொண்டு இந்தப் பொருட்களை மட்டும் வாங்காதீங்க..!! பிரச்சனைகள் பெருசா வரும்..!!

Fri Sep 12 , 2025
மகாளய பட்சம் என்பது நம் முன்னோர்களின் ஆத்மாக்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற மிகவும் உகந்த 15 நாட்கள். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆத்மாக்களை சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஆனால், இந்த முக்கியமான நாட்களில் நாம் செய்யும் சில தவறுகள் முன்னோர்களின் கோபத்தை பெறக் கூடும். இது குடும்பத்தில் பல துன்பங்களுக்கு வழிவகுக்கும். எனவே, மகாளய பட்ச காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் […]
Astor 2025

You May Like