இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று மாலை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட்டின் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இது இந்தியாவின் கடலோர எல்லைகளை பாதுகாக்கவும், கடற்படை மற்றும் விமானப்படை இடையிலான தொலைத் தொடர்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ரூ.1,600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிஎம்எஸ்-03, 4,400 கிலோ எடை கொண்டது. இதன் மூலம், இது இதுவரை இந்தியாவில் இருந்து புவிசுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட அதிக எடையுள்ள செயற்கைக்கோளாக சாதனை படைத்துள்ளது.
2013 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் சேவை முடிவடையவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக சிஎம்எஸ்-03 வடிவமைக்கப்பட்டது. இதனால் இந்திய கடற்படையின் கண்காணிப்பு திறன் புதுமையான நுண்ணறிவுடன் மேம்படுகிறது. அதன் சக்திவாய்ந்த ஏவுதல் திறன் காரணமாக எல்.வி.எம்-3 ராக்கெட்டை “பாகுபலி ராக்கெட்” என இஸ்ரோ அதிகாரிகள் பெருமையாக அழைக்கிறார்கள்.
Read more: வீட்டில் செல்வத்தை பெருக்கும் மணி பிளான்ட்.. திருடி நட்டு வைத்தால் அதிர்ஷ்டம் சேருமா..?



