சமூக வலைதளங்களில் ரீல்ஸ் கலாச்சாரம் வெகுவாகவே வளர்ந்துவிட்டது. குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்களது அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் சாட்ட்ஸ் போன்றவையில் பகிர்வது ஒரு வழக்கமாகி விட்டது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சாலை, பூங்கா, பேருந்து நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்டவை “ரீல்ஸ் லொக்கேஷன்” ஆக மாறியது.
அதுமட்டுமின்றி சமூகவலைத்தளத்தில் பிரபலமாவதற்காக பல்வேறு விபரீத செயல்களில் இன்றைய தலைமுறையினர் ஈடுபடுகிறார்கள். இது பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பதை மறந்து விடுகின்றனர். இந்த அபாயகர பழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய ரயில்வே கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில், ரயில் நிலையங்களின் வளாகங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இவ்வாறு வீடியோ எடுத்து பயணிகளுக்கு தொந்தரவு தரும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி, புகைப்படம் எடுப்பதற்கே மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள், வாட்ச் மென்கள், மற்றும் சுரங்க அமைப்பில் பணியாற்றும் அதிகாரிகள் மூலம் ரீல்ஸ் எடுக்கும் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. இதில் சிக்குபவர்கள் மீது உடனடி அபராதம் விதிக்கப்படுவதுடன், கொள்கை மீறல் காரணமாக ஐபிசி பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம்.
ரெயில் தண்டவாளங்கள் இதுபோன்ற சாகசங்களுக்காகவோ அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை உருவாக்குவதற்காகவோ அல்ல. இதுபோன்ற செயல்கள் உயிர்களை ஆபத்தில் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ரெயில்வே சேவைகளையும் பாதிக்கும். இதுபோன்ற செயல்களில் உள்ள ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய ரயில்வே நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது.
Read more: காலையிலே சோகம்.. சுற்றுலா வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. 15 பேர் படுகாயம்..!!