சருமம் தங்கம் போல ஜொலிக்கனுமா.! இந்த குளியல் பொடி வீட்டிலேயே செய்து பாருங்கள்…!

பொதுவாக ஒவ்வொருவரும் நம் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவோம். அதற்காகவே கடைகளில் விற்கப்படும் சோப்புகளை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் இது நம் சருமத்திற்கு பாதிப்பை தருகிறது.

மேலும் 30 வயதிற்கு மேல் தோல் சுருக்கம், தோல் வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை தருகிறது. இவ்வாறு நம் சருமம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இயற்கையாக கெமிக்கல் சேர்க்காத மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடி பயன்படுத்தி குளித்து வரலாம். இதனால் சருமத்திற்கும் பாதிப்பு இல்லை. நம் சருமம் ஆரோக்கியமாகவும், தங்கம் போல ஜொலிக்கவும் செய்யும்.

குளியல் பொடி செய்ய தேவையான பொருட்கள்
பச்சைப்பயிறு – 250 கிராம், கடலை பருப்பு – 150 கிராம், காய்ந்த வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், வெட்டி வேர், பன்னீர் ரோஜா, குப்பைமேனி இலை, பூலாங்கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போக அரிசி, பூந்திக்காய் தோல், ஆவாரம் பூ மற்றும் இலை – இவை அனைத்தும் 100 கிராம்

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் காயவைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக இதை தேய்த்து குளித்து வந்தால் உடல் பளபளக்கும். மேலும் சொறி, சிரங்கு, தேமல், படை, கரும்புள்ளி, முகப்பருக்கள், கண்களில் கருவளையம் போன்ற தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த குளியல் பொடியை பயன்படுத்தி வந்தால் பலன் கிடைக்கும்.

Baskar

Next Post

வெள்ளிக்கிழமையில் பெண்கள் கட்டாயமாக இதை செய்யக்கூடாது.! ஏன் தெரியுமா.!?

Fri Feb 9 , 2024
பொதுவாக வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தெய்வீகமான நாட்களாக கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை தான் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு உகந்த நாளாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாரத்தின் 6  நாட்களும் வீட்டில் பூஜை செய்யாமல் இருந்தாலும் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக பூஜை செய்ய வேண்டும். இது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் வெள்ளிக்கிழமையில் ஒரு சில செயல்களை செய்வதன் மூலம் வீட்டில் துர்திஷ்டம் ஏற்படும். அவை என்னென்ன என்பதை […]

You May Like