உடலில் வியர்வை நாற்றம் நீங்க குளிக்கும் போது இந்த மூலிகையை பயன்படுத்தி பாருங்க.!?

பொதுவாக நம் சித்தர்கள் மருத்துவ குணமிக்க பல வகையான மூலிகைகளை அறிந்து, அவற்றை நம் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை தீர்க்க பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் மருத்துவ குணம் மிக்க திருநீற்று பச்சிலை செடியில் பலவகையான நோய்களை தீர்க்கும் பண்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதைக் குறித்து பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

மலைகளிலும், காடுகளிலும் அதிகமாக வளரும் திருநீற்றுப்பச்சிலை மிகவும் வாசமானதாகும். இதன் விதைகள் இனிப்பு சுவையுடையது. திருநீற்றுப் பச்சிலை செடியின் விதைகளான சப்ஜா விதைகளை தற்போது உணவுப் பொருட்களிலும், குளிர்பானங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த காலத்தில் இந்த விதைகளை மருந்து பொருட்களாக உபயோகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. சப்ஜா விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் காய்ச்சல், தலைவலி போன்ற தொல்லைகள் நீங்கும்.
  2. சப்ஜா விதைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வயிற்று வலி, வயிற்றுப்புண் நீர் கடுப்பு, கண் எரிச்சல், சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  3. சப்ஜா விதைகள் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்பதால் சூடு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
  4. குறிப்பாக உடலில் உள்ள வியர்வை நாற்றம் நீங்குவதற்கு திருநீற்றுப் பச்சிலை இலைகளை குளிக்கும் தண்ணீரில் போட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வந்தால் உடல் மணக்கும்.
  5. திருநீற்றுப்பச்சிலை இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  6. திருநீற்றுப் பச்சிலை இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு சரியாகும்.
  7. கண் கட்டி, உடலில் ஏற்படும் சூட்டு கட்டி போன்ற பிரச்சனைகளுக்கு திருநீற்றுப் பச்சிலையை அரைத்து தடவி வந்தால் சரியாகும்.
  8. திருநீற்றுப் பச்சிலை இலை சாறுடன், வசம்பு சேர்த்து அரைத்து முகத்தில் பூசினால் முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
  9. திருநீற்றுப்பச்சிலை இலையை மென்று சாப்பிட்டால் பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
  10. இந்த பச்சிலையை சாறு எடுத்து சூடு செய்து மிதமான சூட்டில் காதில் ஊற்றி வந்தால் காது வலி, காது மந்தம், காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய திருநீற்றுப்பச்சிலையின் இலை மற்றும் விதைகளை அடிக்கடி உபயோகிப்பதன் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தலாம்.

English summary: many disease cured by using this herbal seeds

Read more : நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத ட்ரிங்க்.!?

Baskar

Next Post

Aadhar: இனி படிக்கும் பள்ளியிலே ஆதார் பதிவு செய்யலாம்...! தமிழக அரசின் அசத்தலான திட்டம்...!

Wed Feb 28 , 2024
பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டதை […]

You May Like